62 ேே. இராமன் - பன்முக நோக்கில் மனத்திலும் பரதன் இவ்வரசை ஆளமாட்டான் என்ற எண்ணம் தோன்றவுமில்லை; தோன்றியிருக்க வாய்ப்புமில்லை. அப்படியானால் எத்தனையோ நாள்கள் கழித்து, நாடு மீண்ட பரதன் வசிட்டனை நோக்கி, 'எனக்கு இவ்வரசு வேண்டாம் என்று கூறுகின்றவரை யாருக்கும் இதுபற்றிய சிந்தனை இல்லை. பரதன் கூட நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இம்முடிவிற்கு வரவில்லை. ஞானியாகிய வசிட்டன்கூட இதனை எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது. ஒரே வினாடியில் பரதன் எடுத்த முடிவு இது. அப்படி இருக்க கேகேயத்தில் இருக்கும் பரதன் இந்த அரசை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்று இந்த மக்கள் எவ்வாறு கூறினர்? அதுவே உள்ளுணர்வு செய்த செயலாகும். அயோத்திமக்கள் இராமன்மாட்டுக் கொண்டிருந்த அன்பிற்கு ஒர் எல்லையே இல்லை என லாம். பன்னெடுங்காலமாக நிலைத்துள்ளது அயோத்தி, இட்சுவாகு பரம்பரையில் வந்த தசரதனும், இராமனும் அயோத்தி வேந்தர்கள் பலரின் வரிசையில் வருவோர் ஆவர். அரசர்கள் வருவர், போவர். ஆனால் அயோத்திதான் நிலையானது, அரசர்கள் மாறுவர் என்ப தானே முறையான எண்ணம்? இராமன் பிறந்த பிறகு இந்த எண்ணம் மாறிவிட்டது. அயோத்திக்கு அரசன் இராமன் என்பதுபோக இராமன் இருக்கின்ற இடம் அயோத்தி என்ற முடிவிற்கு வந்தவிட்டனர். அதனாலேயே, அவன் காட்டிற்கா போகிறான்? அவன் போனால் நாமும் அங்குதானே போகப்போகிறோம்! அப்படியானால் அந்தக் காடெல்லாம் நாடாகிவிடப் போகிறது என்ற பொருளில், "பெற்றுடைய மண்அவளுக்கு ஈந்து, பிறந்து உலகம் முற்று உடைய கோவைப் பிரியாது மொய்த்து ஈண்டி, உற்று உறைதும் யாரும் உறையவே, சில்நாளில், புற்று உடையகாடு எல்லாம் நாடாகிப் போம்' என்பார். - . கம்ப 1712 என்று பாடுகிறான்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/80
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை