மக்களும் இராமனும்ே . 63 இதுவரை இராமனைக் காணாதபொழுது அவனுக்கு நேர்ந்த கதியைப்பற்றிக் கேட்டபொழுது அடைந்ததுயரத்தைப் பாடியுள்ளான் கவிஞன். இனி அவர்கள் இராமன் காட்டிற்குப் புறப்படும் நிலையில் அவனைக் கண்ட மக்கள் பேசியதை அடுத்துக் கூறுகிறான் கவிஞன். இராமன் காடேகுவதைக் கண்டும் உடையாத நெஞ்சும், போகாத உயிரும் வலியன போலும் என்று சிலர் நொந்தனர். இனி, ஒன்றை எதிர்பார்த்து நிற்கையில் அது நடவாமல் போவதே பெரிய அதிர்ச்சியைத் தரும். எதிர்பார்த்ததற்கு நேர்மாறான ஒரு விளைவு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் அதிர்ச்சி மனித இதயம் தாங்கக் கூடியதாக இராது. இந்த அருங்கருத்தை, “மண்கொடு வரும்" என, வழி இருந்தது, யாம், எண்கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ? பெண்கொடுவினை செயப்பெற்ற நாட்டினில் கண்கொடு பிறத்தலும் கடை' என்றார் - சிலர்" - கம்ப. 1790 என்ற இப்பாடலின் முன்னிரண்டு அடிகளில் விளங்குகிறான் கம்பன். இந்த மனத்துயரம், நடைபெற்ற நிகழ்ச்சிக்குக் காரணமானவர்களைப் பற்றிச் சிந்திக்கிறது. மனித முயற்சிக்கு அப்பாற்பட்டு, வினை வயத்தாலோ, கடவுள் செயலாவோ இது நிகழ்ந்து விட்டால் நாமென்ன செய்வது என்று ஆறுதல் கொள்ளலாம். ஆனால், இங்கு நடைபெற்ற நிகழ்ச்சி தங்களைப் போன்ற ஒரு பெண்ணால் நிகழ்ந்தது என்று நினைக்கும்பொழுது அதனைச் செய்தவள் தங்கள் அன்புக்குரிய கைகேயி என்பதும், இராமனை வளர்த்தவள் எனபதும் மறந்துவிடுகின்றன. பெண்களுக்கே உரிய இரக்கம், அன்பு என்பவற்றை வெட்டித் தள்ளிவிட்டு ஒரு பெண்ணே கொடுவினை செய்தாள் என்றால் இந்தக் கொடுவினையைப் பார்க்கும் கண்களைப் பெற்று இந்த மண்ணில் வாழ்வதே கொடுமை என்று சிலர் வருந்தினராம். . அடுத்தபடியாக, மரஉரி தரித்துக்கொண்டு இலக்குவன் பின்தொடர நடந்துவந்த இராமனைக் கண்ட மக்கள் ஒரு
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/81
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை