64 ேே. இராமன் - பன்முக நோக்கில் வகைப்பட்ட வியப்ப்பில் ஆழ்கின்றனர். 'என்ன கொடுமை! அறத்தின் மூர்த்தியைப் பின்தொடர வேண்டும் என்று கருதிப் புறப்பட்டுச் செல்ல ஒருவர்கட்ட இல்லையே? இரண்டு பிள்ளைகள் பெற்ற ஒரு சீமாட்டியின் ஒரு மகன்தானே உடன் செல்லுகின்றான். இந்த அயோத்தி மாநகர் முழுவதிலும், மரவுரி தரித்துச் செல்லும் இப்பெருமகனுக்கு உறவு என்று சொல்லத் தக்கவர் வேறு ஒருவரும் இல்லையோ' என்று வருந்தினர் எனும் கருத்தைப் பின்வரும் பாடலில் கம்பன் கூறுகிறான்: "திரு அரை சுற்றிய சீரை ஆடையன், பொரு அருந்துயரினன், தொடர்ந்து போகின்றான், இருவரைப் பயந்தவள் ஈன்ற கான்முளை ஒருவனோ, இவற்கு இவ்ஊர் உறவு? என்றார் - சிலர். - - கம்பு 1793 முடிவாக - 'மக்களும், இராமனும் என்ற இத்தலைப்பில் தசரத குமாரன் குடிமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்கிறான், குடிமக்கள் அவனிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதைக் கண் டோம். ஏறத்தாழ எ ல் லா இராமாயணங்களிலும் இராமனுடைய மக்கள் தொடர்பும், மக்களுடைய இராமன் தொடர்பும் ஏறக்குறைய இவ்வாறுதான் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆதிகாவியமான, வான்மீகத்திலும், தசரதகுமாரன், "பூர்வபாஷி” என்றே பேசப்படுகின்றான். பொதுவாக அதிகாரத்தில் உள்ளவர்கள் பெருஞ்செல்வர்கள் என்பவர்கள் சாதாரண மக்களைக் கண்டால் முதலில் பேசமாட்டார்கள். எதிரே உள்ள சாதாரண மக்கள் மிக்க பணிவுடன் முதலில் பேசிய பிறகு தங்கள் நிலையில் இருந்து இறங்கிவந்து பேசுவதுதான் அதிகாரத்தில் உள்ளவர்கள் இயல்பாகும். ஆனால் அதிகாரம், செல்வம் இரண்டிலும் தன்னிகரில்லாமல் விளங்கிய இராகவன் பொதுமக்களை, ஏழைகளைக் கண்டவுடன் தானே
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/82
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை