மக்களும் இராமனும்ேே 65 முகமலர்ச்சியுடன் முன்வந்து இனிய வார்த்தைகளை அவர்கள் பேசுவதற்குத் தொடங்கு முன்னர் தானே பேசுவானாம். முதலில் பேசுபவன்' என்ற பொருளில் "பூர்வபாஷி" என்று வான்மீக முனிவர் இராமனைக் கூறுகிறார். வான்மீகத்தில் கூட அரசனுடைய செளலப்பியம் வெளிப்படுகிறதே தவிர, அவனுடைய நீர்மை அதாவது நீருடன் நீர்கலப்பதுபோலப் பேசப்படுபவர்களின் மனத்துடன் மனம் கலந்து பேசும் இயல்பு பேசப்படவில்லை. அத்தகைய நீர்மையை எடுத்துக்காட்டுவதன் மூலமாக இராமனுடைய இரண்டு பண்புகளை எடுத்துக்காட்டுகிறான் கம்பன். மனிதத் தன்மையில், மனிதப் பண்பாட்டில் நடுவு நிலைபெற்ற மனப்போக்கில் இராமன் என்ற மனிதன் தனக்கு நிகர் தானே என விளங்குகிறான் என்பதை முதலாவதாகக் காட்டுகிறான் கம்பன். இதற்கடுத்தபடியாக, ஏனைய உயிர்கள்மாட்டு வேறுபாடு அற்றுப் பழகும் தன்மையால் இராமன் மனித இயல்புக்கும் மேம்பட்டுத் தெய்வத் தன்மையுடன் காட்சி அளிக்கிறான் என்பதைக் காட்டவும் (கம்பன் இந்தப் பகுதிகளைப் பயன்படுத்திக் கொள்கிறான். உயர்நிலையில் உள்ள ஒருவன் எவ்வளவுதான் தன் பதவியை மறந்து சமத்துவம் பாராட்டி நீர்மையுடன் பழகினாலும் சாதாரண மக்கள் மனத்தில், தம்முடன் பழகுகின்றவர்கள் உயர்ந்த நிலையில் இருந்து இறங்கிவந்து பழகுகின்றார்கள் என்ற எண்ணம் ஒரு மூலையில் இருக்கத்தான் செய்யும். அந்த எண்ணம் தோன்றாதபடி ஒருவன் பழகுகிறான் என்றால் அது அவனுடைய தெய்வீகத் தன்மையையே குறிக்கும். வேண்டியவர் வேண்டாதவர் என்ற வேறுபாடு அற்று, விருப்பு வெறுப்புகள் அற்று அனைவரையும் ஒன்றாக மதித்துக் கருணைகாட்டி ஒருவன் பழகுகிறான் என்றால், அவன் இறைவனாகத்தான் இருக்கவேண்டும். காரணம், இங்குக் கூறப்பெற்ற பண்புகள் அனைத்தும் இறைவன் ஒருவனிடம் உள்ளன. இந்தப் பண்புகளை விரித்துக் கூறுவதன் மூலம் இராமன் யார் 5-{gyی
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/83
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை