பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தந்தையும் இராமனும் தசரதனுக்கு இராமன் ஒருவன் நினைவே பன்னெடுங்காலம் மகப்பேறில்லாமல் வருந்திய தசரதன் இறுதியாகக் கலைக்கோட்டு முனிவனை வரவழைத்து ஒரு மாபெரும் வேள்வி செய்து அதன் பயனாக நான்கு புதல்வர் களைப் பெற்றான். முதல் மனைவியாகிய கோசலையிடம் இராமனும், இரண்டாம் மனைவியாகிய கைகேயியிடம் பரதனும், மூன்றாம் மனைவியாகிய சுமித்திரையிடம் இலக்குவ, சத்துருக்கனர்களும் பிறந்தனர். வசிட்டரிடம் கல்வி பயில நால்வரும் ஒருங்கே சென்றார்களென்றாலும், இராமனும் இலக்குவனும் இரட்டையர்களாகவும், பரதனும் சத்துருக்கனனும் இரட்டையர்களாகவும் இணைபிரியாது இருக்கத் தொடங்கினர். தசரதனைப் பொறுத்தமட்டில் இராமனைத் தவிர ஏனைய பிள்ளைகள் இருப்பதாகவே நினைக்கவில்லை. இந்த நிலையில்தான் அரசவையில் அமர்ந் திருக்கும்பொழுது விசுவாமித்திர முனிவன் அங்குத் தோன்றினான். முனிவனுக்குரிய உபசாரங்கள் அனைத்தையும் செய்த தசரதன், முனிவன் வேண்டுவது யாது?’ என்று வினவினான். விசுவாமித்திரன் தான் செய்யும் யாகத்திற்கு இடையூறு செய்யும் அசுரர்களை அழிக்கும் ஓர் உதவியை நாடி வந்ததாக அழகாகச் சொன்னான். அந்தப் பாடல் நுண்மையாக நோக்கத்தக்கது. தருவனத்துள் யான் இயற்றும் தகைவேள்விக்கு இடையூற, தவம் செய்வோர்கள் வெருவரச் சென்று அடை காம வெகுளிஎன, நிருதர் இடை விலக்கா வண்ணம்,