68 38 இராமன் - பன்முக நோக்கில் "செருமுகத்துக் காத்தி" என, நின்சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி என, உயிர் இரக்கும் கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்." - கம்ப. 324 இப்பாடலில் விசுவாமித்திரன் என்ன கேட்டான் என்பதைக் கவனிக்க வேண்டும். "என் வேள்வியைக் காக்க நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவரைத் தந்திடுதி” என்றுதானே கேட்டான்? சிறுவர் நால்வரில் கரியநிறம் உடையார் இருவர்; செந்நிறம் உடையார் இருவர். அப்படி இருக்கும்பொழுது, கரிய செம்மல் ஒருவனை என்று முனிவன் கேட்டபொழுது மக்கள் நால்வரையும் சமமாக அன்புசெய்து தசரதன் வளர்த்திருப்பானேயாயின், இதோ "பரதனை அழைத்துச் செல்லுங்கள்" என்று சொல்லியிருக்கலாமே! இராமன், பரதன் ஆகிய இருவரும் கரிய நிறமுடையவர்கள். அடுத்தடுத்த நட்சத்திரங்களில் பிறந்த வர்கள். இவர்கள் வயது வேறுபாடு ஒரு நாள்தான். கரியசெம்மல் ஒருவனை என்று கேட்ட விசுவாமித்திரனுக்குக் கரிய செம்மல் இருவருள் ஒருவனாகிய பரதனை அழைத்துச் செல்க என்று தசரதன் கூறியிருந்தால், விசுவாமித்திரன் வேறு ஒன்றும் செய்யமுடியாமல் பரிதாபமாக விழித்திருப் பான். அவன் கேட்ட பொருளைத் தசரதன் தந்துவிட்டான் என்று முடிந்துவிடும். அவ்வாறாயின், இராமாவதார நோக்கம் நிறைவேறாது என்பது உண்மைதான். என்றாலும், தசரதன் அப்படிச் செய்யாது தன் உயிரையே கேட்பதாக நினைந்து, வேறு சமாதானம் கூறவேண்டிய தேவை என்ன ? தசரதன் மனத்தில் இராமன் ஒருவனைத் தவிர வேறு மூன்று பிள்ளைகள் இருப்பது என்றுமே தோன்றியதில்லை. அதனால் தான் கரிய செம்மல் ஒருவனை' என்று முனிவன் கூறியவுடன், இராமனை இழக்கப் போவதாகக் கருதித் தசரதன் ஒலமிடத் தொடங்கிவிட்டான். பின்னரும் கவிஞன் தசரதனைப்பற்றிச்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/86
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை