தந்தையும் இராமனும்ே 69 சொல்லும்பொழுது, "மைந்தனை அலாது உயிர் வேறு இலாத மன்னன்" (கம்ப 1514) என்று கூறுகிறான். நான்கு பிள்ளைகளைப் பெற்றும் ஒருவனிடம் அதீத அன்பு வைத்ததால் தசரதன் வாழ்வில் சிக்கல் நேர்ந்தது. விசுவாமித்திரன் ஏன் இராமனை அழைக்கிறான் என்பதைத் தன் தவவலிமையால் உணர்ந்த வசிட்டன், தசரதனுக்குச் சமாதானம் சொல்லி இராமனை அனுப்புமாறு பணிக்கிறான். அவன் உரையை ஏற்றுக் கொண்ட தசரதன் "திருவின் கேள்வனைக் கொணர்மின்" (கம்ப 330) என்று கூறினானே தவிர, “இலக்குவனையும் அழைத்து வருக” என்று சொல்லவில்லை. ஆனால், இராமன் இணையடி பிரியாத இலக்குவன் உடன்வந்து நிற்கிறான். அவர்கள் இருவரையும் முனிவரிடம் கையகப்படுத்தி, "முணிபுங்கவனே! இன்று முதல் நீயே இவர்க்குத் தந்தை, தாய், குரு ஆகிய அனைவரும் ஆவாய். இயைந்த செய்க" என்று கூறி அனுப்பினான். இதற்கு அடுத்தபடியாகத் தந்தையும் மைந்தனும் சந்திக்கும் இடம் மிதிலையில் திருமண விழாவில்தான். மண மேடையைச் சுற்றியிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த தசரதனை மணக்கோலத்துடன் வந்த இராமன் ஏனைய முனிவர்களுடன் சேர்த்து வணங்கினான். பரசுராமன் இடையீடு: தசரதன் கலக்கமும் மயக்கமும் மணமக்களை அழைத்துக் கொண்டு அயோத்தி திரும்பு கிறான் தசரதன். இராமன் தனி ஒரு தேரில் வர பயணம் தொடங்கிச் சில தூரம் சென்றவுடன் எதிர்பாராத விதமாகப் பரசுராமன் எல்லையற்ற சினத்துடன் இராமன் தேர் எதிரே வந்து நின்றான். பரசுராமன் வருகையைக் கண்ட தசரதன் அஞ்சி நடுங்கி இராமன் பக்கத்தில் வந்து நின்றான். ஆனால், இராமனோ எனில் ஒரு சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் எதிரே நிற்பவனைப் பார்த்துக்கூடப் பேசாமல் "யாரோ இவன்" என்று கேட்டான் என்று பாடுகிறான் கவிஞன்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/87
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை