70 ேே. இராமன் - பன்முக நோக்கில் சிங்கம் என உயர் தேர் வரு குமரன் எதிர், சென்றான், அம் கண் அரசவனும் இவன் ஆரோ? எனும் அளவில்" - கம்ப. 1278 இராமன் எவ்விதக் கலக்கமும் இல்லாமல் பரசுராமன் எதிரே நிற்கவும், தசரதன் அவனை வணங்கி, அவன் வீரத்தை மெச்சி, "நாங்கள் எளியவர்கள். அப்பாவிகளாகிய எங்கள் முன்னர் உன் வலிமையைக் காட்டுவது அழகல்ல" என்ற பொருளில், -கனல் உமிழும் ஒளிவாய் மழுஉடையாய்! -பொர உரியாரிடை அல்லால், எளியாரிடை வலியார்வலிஎன் ஆகுவது? என்றான். - கம்ப. 1282 இங்ங்ணம் பணிந்து, கெஞ்சி உயிர்ப்பிச்சை கேட்கும் தசரதனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இராமனிடம் பேசுகிறான் பரசுராமன். இராமனை நோக்கிப் பரசுராமன், "நீ ஒடித்த சிவதனுசு ஏற்கெனவே ஒடிந்த ஒன்றாகும். அதை ஒடித்ததால் நீ பெருமை கொள்ளத் தேவை இல்லை. என்னுடைய தோள்கள் இப்பொழுது போரை விரும்பித் தினவு கொண்டுள்ளன" (கம்ப 1280) என்று கூறிவிட்டு, மேலும் தான் வந்த காரணத்தைப் பின்வருமாறு கூறுகின்றான்: "உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன், உறுபகை ஒடுக்கிப் - போந்தேன், அலகுஇல் மா தவங்கள் செய்து, ஒர் அரு வரை - இருந்தேன்; ஆண்டை சிலையை நீ இறுத்த ஒசை செவிஉற, சிறி வந்தேன்; மலைகுவென்; வல்லை ஆகின், வாங்குதி, தனுவை! என்றான்." - கம்ப. 1296
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/88
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை