தந்தையும் இராமனும்ே 7: இப்பாடலில் தவ வலிமையும் அகந்தையும் எல்லை மீறி ஆட்கொண்டதால் எதிரே இருப்பவன் யார் என்று அறியாத பரசுராமன் "வல்லை ஆகின் வாங்குதி தனுவை” என்றான். இப்பொழுது பரசுராமன் சொன்ன வார்த்தைகளில் எல்லை யற்ற அலட்சியம் தொனிப்பதைக் காணலாம். "உனக்கு வலிமை இருந்தால் இந்த வில்லைக் கையில் வாங்குவாயாக" என்று கூறினான். அவனுடைய மனத்தில் சாதாரண மனிதனாக உள்ள இராமன், அதிலும் அண்மையில் திருமணம் செய்துகொண்டு திரும்பும் ஒருவன் ஒரு பொருட்டாக மதிக்கப்பட வேண்டியவன் அல்லன் என்ற எண்ணம் தலை தூக்கி நின்றது. வாங்குதி என்று கூறுகையில் இந்த வில்லைக் கையில் வாங்கி வைத்துக்கொள்ளக்கூடிய ஆற்றல்கூட இராமனுக்கு இல்லை என்ற முடிவில்தான் அச் சொல்லைப் பயன்படுத்தினான் பரசுராமன். - தேவருலகம்வரை சென்று போர் புரிந்த தசரதனே மயங்கி விழுந்துகிடக்கும் நிலையில் ஒரு சிறிதும் கலங்காமல், அலட்டிக்கொள்ளாமல் தன்னுடைய ஆர்ப்பாட்டத்தையும், இடி சொற்களையும், சினத்தையும் உலகம் கண்டு அஞ்சும் தன் மழுவையும்கூடப் பொருட்படுத்தாமல் முக அமைதி ஒரு சிறிதும் மாறாமல் நிற்கின்றானே, இவன் எப்படிப்பட்டவனாக இருப்பானோ என்ற எண்ணம்கூட இல்லாமல் பரசுராமன் இவ்வாறு பேசியது அவன் அறியாமையால் அன்று; தன் ஆற்றல்மேல்கொண்ட நம்பிக்கை யாலும் அன்று; மாற்றான் வலியைக் குறைத்து மதிப்பதே பெரும் தவறு என்று நீதிநூல் சொல்லவும், இந்தப் பரசுராமன் மாற்றானை, அதுவும் இப்படிப்பட்ட மாற்றானைப் பொருட்டாக மதியாமல் பேசுவது அவனது அகந்தையினாலேயேயாகும். அகந்தையை அழிக்கக்கூடியவன் பரம்பொருள் ஒருவனே ஆவான். அந்தப் பரம்பொருளின் தரிசனம் கிடைக்காவிட்டால் இந்த ஆணவம் என்ற தீ கொழுந்துவிட்டு எரிந்து, அந்த ஆணவத்தை உடையவனையே இறுதியாக அழித்துவிடும். மாபெரும் தவங்கள் செய்ததால்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/89
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை