72 $$ இராமன் - பன்முக நோக்கில் பரசுராமன், இறுதிக் காலத்தில் உயிர் பிழைக்கும் பேற்றை இறைவன் வழங்கினான். இப்பொழுது இராமனிடம் வாராதிருந்தால் அழிந்தே போயிருப்பான். இப்பொழுது இறைவன் அவனை எப்படி ஆட்கொள்கின்றான் என்பதைக் ff6ððs 6lDffl D. "வல்லைஆகின் வாங்குதி தனுவை” என்று சொல்லித் தானே விஷ்ணு தனுசைத் தந்தான். 'இராமன் அதனைக் கையில் வாங்கித் துக்கமுடியாமல் என்னிடம் தோற்று விடுவான் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த பரசுராமன் எதிரே என்ன நடந்தது? பரசுராமன் ஆர்ப்பாட்டத்திற்குப் பதிலாக இராகவன் ஒரு புன்சிரிப்பை உதிர்த்தான். "அப்பா பரசுராமா! நீ உயர்வாகச் சொல்லும் அந்த நாரணன் வில்லைத் தருக" என்று கையை நீட்டி வாங்கினான். வில்லைத்துக்கமுடியாமல் திணறப் போகிறான் என்ற கற்பனையில் மிதந்துகொண்டிருந்த பரசுராமனுக்குச் சற்றும் எதிர்பாராத பேரதிர்ச்சி ஏற்பட்டது. 'முடிந்தால் கையில் வாங்கு' என்ற பொருளில் வல்லை ஆகின் வாங்குதி என்றுதானே பரசுராமன் பேசினான்: 'வாங்குதி என்ற சொல்லுக்கு வளைத்தல் என்ற பொருளும் உண்டல்லவா? அந்தப் பொருளை மனத்தில் கொண்ட இராகவன், வாங்கிய வில்லை வளைத்து நாணேற்றி விட்டான். மலைபோல் ஆணவத்துடன் வந்த பரசுராமன் கடுகுபோல் சிறுத்தவனாகிக் கதிகலங்கி விட்டான். இந்தக் காட்சியைக் கம்பன் பின்வரும் பாடலில் தீட்டிக் காட்டுகிறான். "என்றனன் என்ன, நின்ற இராமனும் முறுவல் எய்தி, நன்று ஒளிர் முகத்தன் ஆகி, நாரணன் வலியின் ஆண்ட வென்றவில் தருக! என்ன, கொடுத்தனன்; - விரன்கொண்டு, அத் துன்று இருஞ் சபையோன் அஞ்ச, தோளுறவாங்கி, சொல்லும்: - ಹbu, 1297
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/90
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை