தந்தையும் இராமனும்ேே 73 இப்பாடலை அடுத்துவரும் பாடல் நடுங்கிப்போன பரசுராமன் சற்றும் எதிர்பாராத ஒன்று அங்கே நடந்து விட்டதைக் குறிப்பிடுகிறது. வில்லை வளைத்ததோடு மட்டும் அல்லாமல், நாண் ஏற்றி அம்பையும் அதில் தொடுத்து விட்டான். எதிரே நின்ற பரசுராமன் தன்னைத்தான் குறி வைத்து கொல்லப் போகிறான் என்று நடுங்கி விட்டான். அப்படி நடுங்கக் காரணமும் உண்டு. "என்னுடைய தோள்கள் திணவெடுக்கின்றன; போர்செய்து நீண்ட காலம் ஆயிற்று; இப்பொழுது உன்னுடன் போர் செய்ய வந்தேன்" என்று பரசுராமன் தானே முதலில் கூறினான். இப்பொழுது இராகவன் வில்லை வளைத்து நாண் ஏற்றி அம்பையும் செருகி விட்டான் என்றால், பரசுராமன் சொற்படியே போரை ஏற்றுக்கொண்டு தன்னை அழிக்க முடிவு செய்து விட்டான் என்று பரசுராமன் நினைத்து அஞ்சி நின்றதில் புதுமை ஒன்றும் இல்லை. இதுவரை அனைத்துமே அவன் எதிர்பாராதவையாக நடந்து விட்டன. அதேபோல இப்பொழுது தன்னைக்கொல்லப் போகிறான் என்று அஞ்சி எதிர்பார்த்து நிற்கையில் மற்றொன்றும் எதிர்பாராமல் நடந்து விட்டது. ஆம்! சக்கரவர்த்தித் திருமகன் கொண்ட புன்முறுவல் மாறாமல் இதோ பேசத் தொடங்குகிறான். 'பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை என்றாலும், வேதவித்து ஆய மேலோன் மைந்தன்நீ விரதம் பூண்டாய், ஆதலின் கொல்லல் ஆகாது அம்பு இது பிழைப்பது அன்றால், யாது இதற்கு இலக்கம் ஆவது? இயம்புதி விரைவின்' எனறான. . கம்ப. 1298 “பரசுராமா! உலகில் உள்ள அரசர்களெல்லாரும் ஒரு பிழையும் செய்யாதிருக்க, உன் வெறி காரணமாக அவர்கள் அனைவரையும் கொன்று தீர்த்தாய். அதற்குரிய தண்டனை யாக உன்னை இப்பொழுது கொல்வது நியாயமானதே
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/91
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை