74 36 இராமன் - பன்முக நோக்கில் ஆகும். இரண்டு காரணங்களினால் உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். ஒன்று, வேத வித்தாகிய ஜமதக்கினி முனிவனின் மகன் நீ இரண்டாவது, நீ தவவேடம் பூண்டுள்ளாய். ஆதலால் உன்னைக் கொல்வது சரியன்று. என்றாலும், என்னுடைய பாணம் பூட்டப்பட்டுவிட்டால் அது செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் என்பால் வராது. இந்த நிலையில், இந்த அம்புக்கு இலக்கு எது என்பதை நீயே தெரிந்து விரைவில் சொல்வாயாக" என்ற கருத்துடன் அமைந்த இப்பாடல், இராமன் பரம்பொருள்தானா என்ற ஐயம் யாருடைய மனத்திலேனும் இருக்குமேயானால் அதனைப் போக்கும் விடையாக அமைந்துள்ளது. பரம்பொருள் ஒருவன்தான், குன்றே அனைய குற்றங்கள் செய்பவரையும் மன்னித்து ஆட்கொள்ளும் இயல்புடையவன். பரசுராமனுக்குத் தண்டனை தரவேண்டியது நியாயமானதே ஆகும். ஆனால், பரசுராமன் என்ற மனிதனை அழிப்பதில் எவ்விதப் பயனும் இல்லை. அவனுடைய நடத்தைக்குக் காரணமாய் இருப்பது அகந்தை அந்த அகந்தை எப்படி வந்தது? அவன் செய்துள்ள தவத்தின் வலிமையால் இந்த அகந்தை வந்தது. எனவே, பெருமான் அவன் அகந்தையை அழிக்க முடிவு செய்துவிட்டு, அவன் வாயாலேயே அந்த விடை வரவேண்டும் என்ற கருத்தில் இதற்கு இலக்கு யாது? என்று கேட்டான். பரசுராமன் ஒரு கணப்பொழுதில் உண்மையை அறிந்து கொண்டான். இப்பொழுது அவன் கண் எதிரே தசரதன் மகன், சாதாரண மானுடன் என்ற வடிவம் மறைந்து, - விட்டது. பொன்னாலாகிய வீரக்கழலை அணிந்து, ஒளி பொருந்திய சக்ராயுதத்தை ஏந்தி நிற்கும் இறைவன் வடிவமே தெரிகிறது. இந்த உணர்வு வந்தவுடன் "ஐயனே! நீ முன்னர் உன்னுடைய உலகத்தில் வைத்திருந்த இந்த வில்கூட உன் ஆற்றலுக்கு ஏற்றதன்று" (1800) என்று கூறிய பரசுராமன் அடுத்துப் பேசுவது அறியத்தக்கதாகும்.
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/92
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை