தந்தையும் இராமனும்ே 79 உள்பட எல்லா அரச பரம்பரையினரிடமும் முதல் மகனுக்குப் பட்டம் தருவது இயல்பாக நடைபெறுகின்ற ஒன்றாகும். இராமனை ஒத்த பண்பாளர்கள் இதை மறுப்பதற்கோ தடுப்பதற்கோ, வேண்டாம் எனச் சொல்வதற்கோ எவ்விதக் காரணமும் இல்லை. அப்படியிருக்க, தசரதன் ஒன்பது பாடல்களில் இராமன் மறுத்துவிடக் கூடாது' என்று இவ்வளவு விரிவாக சொல்லக் காரணம் என்ன? 'உன்னிடம் வேண்டிக்கொள்வது ஒன்று உண்டு. என்று ஏன் தொடங்க வேண்டும்? கட்டளை இடும் உரிமை பெற்ற தந்தை மகனிடம் வேண்டிக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது? உண்மையில் நியாயமற்ற ஒன்றைச் செய்ய வேண்டுமென்று கட்டளை இட்டால் மறுத்து விடுவானோ என்று அஞ்சி உன்னை வேண்டிக் கொள்கிறேன் என்று சொல்வது நியாயம். இவ்வரசை ஏற்றுக்கொள்' என்று கட்டளை இடுவதற்குப் பதிலாக வேண்டுகிறேன் என்று ஏன் சொல்லவேண்டும் அந்த வேண்டுதலை ஒன்பது பாடல்களில் ஏன் விரித்துக் கூறவேண்டும்: இறுதியாக, இராமன் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்தபொழுது, 'தருதி இவ்வரம்' என மகனிடம் வரம் கேட்க வேண்டிய சூழ்நிலை என்ன வந்தது? இவை அனைத்தையும் ஒன்றாக வைத்துப் பார்க்கும் பொழுது இராமன் பட்டத்தை ஏற்கச் சம்மதிக்க மாட்டான் என்ற ஒர் எண்ணம் தசரதன் அடிமனத்தில் தோன்றியிருக்க வேண்டும். மந்திராலோசனை சபையில், பலர் முன்னிலையில் வேறு காரணம் காட்டி இராமன் மறுத்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் தசரதன் அடிமனத்தில் உறுதியாக நிலைபெற்றிருக்க வேண்டும். அந்த இக்கட்டான சூழ்நிலை ஏற்படாமல் இருக்கத்தான் வேண்டுதல் என்று ஆரம்பித்து 'தருதி இவ்வரம் என்று தசரதன் கூறிமுடிக்கிறான். 'தருதி இவ்வரம்' என்று கேட்டதற்குக் காரணமே, இராமனை மறுத்துப் பேசாமல் இருக்கச் செய்வதற்குத்தான் தந்தையே மகனைப் பார்த்து வரந்தருக" என்று கேட்டால், எந்த மகன்
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/97
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை