80 38 இராமன் - பன்முக நோக்கில் மறுக்கமுடியும். இந்த வகையில் கம்பன் விரிவாகச் சொல்ல வில்லை யென்றாலும், கற்பவர் மனத்தில் இச் சந்தேகங்கள் தோன்றுமாறு செய்துவிட்டான். "தாதை அப்பரிசு உரைசெய” என்ற பாடலில் "கடன் இது என்று உணர்ந்தும்” “யாது கொற்றவன் ஏவியது அதன் வழி நிற்றலே நீதி" என்றும் "அப்பணிதலை நின்றான்" என்றும் கூறப்பட்டுள்ள பகுதிகள் சிந்திக்க வைக்கின்றன. அரசைத் தாங்குவது முதல் மகனாகிய தனக்குக் கடமை என்ற முடிவுக்கு வந்த பிறகு அரசன் ஏவியதற்குக் கட்டுப்பட வேண்டும் என்று சொல்வதில் அர்த்தம் என்ன இருக்கிறது? இப்பொருளை ஏற்றுக் கொள்வதானால் கொற்றவன் ஏவலுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற தொடர் பொருளற்ற தாகிவிடும். இவ்வாறு பொருள் சொல்லாமல், கடன் இது என்று உணர்ந்தும் என்பதற்கு இப்பட்டம் பரதனுக்குப் போவதே நியாயமானது என்று தெரிந்திருந்தும் என்று பொருள் கொண்டால் இதனை அறிந்த இராமன் என்ன செய்திருப்பான்: தந்தை என்று உரிமை பாராட்டி, தாங்கள் செய்வது தவறு என்று கூறியிருக்கலாம். அதற்கடுத்தபடி என்னவென்றால் அரசன் ஆணை, அது எப்படி இருப்பினும் கீழ்ப்படிய வேண்டியது தன் கடமை என்று பொருள் கொண்டால், உணர்ந்தும் நினைந்தும், என்ற சொற்களுக்குப் பொருள் நேராகிவிடும். இப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும் என்பதைக் கூறக் கவிச்சக்கரவர்த்தி நுணுக்கமான சில வார்த்தைகளைப் பயன்படுத்துகிறான். ஒன்பது பாடல் களிலும் அழாத குறையாகத் தசரதன் இராமனைக் கெஞ்சுவது பரிதாபமாக இருக்கிறது. அப்படி இருக்க அதனைக் கேட்டுக் கெண்டிருந்த இராகவன், 'யாது கொற்றவன் ஏவியது என்று நினைந்தால் அது புதுமையாக உள்ளது. இத்தனை பாடல் களிலும் அரசன் வேண்டிக்கொள்வதன் நோக்கமே, "நான் சொல்வதை மறுத்துவிடாதே" என்று சொல்வதன் மறுபதிப் பாகும். அதனால்தான் கடன், நியாயம் என்பவை வேறு வேறாக இருப்பினும், "கொற்றவன் ஏவியதை
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/98
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை