பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8-1 இராமர் செய்த கோயில் பஞ்சாங்கத்திற்குச் சரியான காலம் பிப்ரவரி. மார்ச் ஆகும். பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத் பெருவிழாவைக் கான வடமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இராமேஸ்வரத்தில் கூடுகின்றனர். இந்த விழாவின் முதல் நாளன்று மட்டும் இரவு சுவாமியும் அம்பாளும் பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றனர். விழா நாள்களில் இரவிலும் பகலிலும் பலவித வாகனங்களிலும் தங்கப் பல்லக்கிலும் வெள்ளிரதத்திலும் தெய்வீக தரிசனம் தொடர்கிறது. இந்த விழாவின் மூன்றாம் நாள் மட்டும் இறைவனும் இறைவரியும் காலையில் கந்தமாதன மண்டகப்படிக்கு முறையே கைலாச வாகனத்திலும், சிம்மவாகனத்திலும் எழுந்தருளிப் போய் இரவு திருக்கோவில் திரும்புகின்றனர். 5) வசந்த விழா ஒவ்வொரு ஆண்டிலும் இரண்டாவதாக நடைபெறும் விழா வசந்தவிழா வைகாசிப் பெளர்ணமியன்று (மே, ஜூன் மாதங்களில்) அடுத்து ஜேஷடவார் சுக்ல பெளர்ணமியில் (ജ~ങ്r ജ്ഞസേ மாதத்தில்) இராமலிங்க பிரதிஷ்டை விழா இராமபிரான் இராமேசுவரம் கடற்கரையில் சிதாப்பிராட்டி யினால் மண்ணால் சிருஷ்டிக்கப்பட்ட இராமலிங்கத்தைப் பிரதிஷடை செய்து பூஜை செய்ததின் நினைவாக, அடுத்து ஆஷாட பகுல கிருஷ்ண ாஷ்டமியில் (ജൂാ, ஆகஸ்டில்) நடைபெறும் திருக்கல்யாண விழா. இந்த விழா ஏழு நிகழ்ச்சிகளாக நடைபெறுகின்றன. (1) இடப வாகனத்தில் இறைவன் இறைவி எழுந்தருளல் (2) இரதத்தில் உலா வருதல் (3) அம்பாள் தபசு (4) அம்பாள் தங்கப்பல்லக்கில் சயன சேவை (5) திருக்கல்யாணம் (6) ஊஞ்சல் (7) கந்தமாதனமண்டகப்படி இராம - 7