பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 85 பதினேழு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த விழாவின் பொழுது. தங்கப்பல்லக்கு. தாமரை. வெள்ளி இடபம் தங்கக் கேடயம் ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. 6) அர்த்தோதய, மகோதயவிழா ஆண்டுதோறும் தை அல்லது மாசி மாதம் அமாவாசை, ஞாயிற்றுக்கிழமை. திருவோன நட்சத்திரமும் வித்யபாதமும் கூடிய நாள் அர்த்தோதயம் எனப்படும். இந்த நாள் மேற்படி நட்சத்திரம். திதி ஆகியவைகளுடன் கூடி வந்தால் இதனை மகோதயம் என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் இராமேசுவரத்தை அடுத்த தனு எrகோடியில் கடலில் நீராடுவது மிகச் சிறந்த புனிதச் செயலாகக் கருதப்படுகிறது. பிதிரர்களது நற்கதிக்கு இந்த நீராடல் பயனுள்ளதாக அமையும் என்பது ஐதிகம். ஆண்டுதோறும் இந்தக் கடல் நீராடலில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கு திருக்காட்சி வழங்க இராமேஸ்வரம் இராமநாதசுவாமி அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் தனுக்கோடி சேது திர்த்தத்திற்கு தங்க இடப வாகனத்தில் எழுந்தருளுகிறார். இந்த விழாக்கள் தவிர ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று ஆவணி மூல விழா சிறப்பாக நடைபெற்று வந்ததை இந்தக் திருக்கோயிலின் செப்பேடுகளில் இருந்து தெரியவருகிறது. குறிப்பாக முத்து விஜயரகுநாத சேதுபதி காலத்தில் இந்த விழா நடத்துவதற்கான அறக்கொடை வழங்கி உதவியதை இந்த செப்பேடு விவரிக்கிறது. ஆனால் என்ன காரணத்தினாலோ இந்த விழா இப்பொழுது நடைபெறுவதில்லை. மற்றும் இந்த விழாக்கள் அனைத்தும் குறிப்பிட்ட மாதம். நாள் நட்சத்திரத்தில் சிறப்பாக நடைபெறுவதற்குத் தக்க