பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் () | சேதுபதி மன்னர்களில் சிறந்த சிவபக்தராகவும் சிரிய சிவநெறித் தொண்டராகவும் விளங்கி, இராமேசுவரம் திருக்கோவிலுக்குப் பல திருப்பணிகளை சி செய்த முத்து விஜயரகுநாத சேதுபதியின் நினைவாகச் சேதுபதி ஈஸ்வரர் என்ற பெயரில் சிறு கோயில் ஒன்று இராமேக வரம் திருக்கோயிலில் உள்ளது. அணுக்க மண்டபத்திற்கு வடமேற்கு மூலையில் இந்தக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 大大大大 இந்தத் திருக்கோயிலின் நிர்மானம். வழிபாடுகள். விழாக்கள். ஆகியவற்றைக் காலமெல்லாம் சிறப்பாக நடைபெறச் சேதுபதி மன்னர்கள் தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் என்பதை ஏற்கனவே கண்டோம். முந்தைய காலத்தில் தமிழக மக்களின் பயனுள்ள பொழுது போக்காகத் திருக்கோயில் விழாக்கள் மட்டும் அமைந்து இருந்ததால் பொது மக்களின் கவனத்தைச் சிறப்பாக ஈர்ப்பதற்குச் சேதுபதி மன்னர்கள் இந்தக் கோயிலின் தெய்வத் திருமேனிகளுக்குப் பலவிதமான பொன். வெள்ளி. மணிகளால் ஆன பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருவாபரணங்களைச் செய்து தானமாக வழங்கி இருப்பதுடன் அ ைமயாமல் திருக்கோயில் தொடர்புடைய வேறு சில சாதனைகளையும் செய்துள்ளனர். முதலாவதாக திருவிழாக்களில் சுவாமி அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா வருவதற்கு ஏற்ற அழகிய பல்லக்குகளைச் (தேடகங்கள்) செய்து கொடுத்துள்ளனர். அடுத்து விழாக்களின் பொழுது ஊர்வலத்தின் முன்னே எடுத்துச் செல்வதற்காக அழகிய வேலைப்பாடு அமைந்துள்ள வாகனங்களையும் செய்து அளித்துள்ளனர். இவைகளில் யானை. சிங்கம் போன்ற வாகனங்களுக்குப் பொன்னாலான தகடுகளையும் வேய்ந்துள்ளனர். இவைகள் அனைத்தையும் அந்தக் காலத்தில் கோயில் கலைகளில் சிறப்புடன் விளங்கிய திருவாரூர். தஞ்சை சுவாமி மலையிலுள்ள தச்சு