பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*}8 இராமர் செய்த கோயில் கோயில்களில் தமிழ் பிராம்மனர்கள் கோயில் பன்களில் பொறுப்புடையவராக இருக்கும் பொழுது இந்தக் திருக்கோயில் மட்டும் விதிவிலக்காக இருப்பதற்கு வேறு காரணம் இருந்திருக்க வேண்டும். இந்தக் கோவில் நிர்வாகப் பணியில் மகாராஷ்டிர குருக்கள் சபையாரும். தமிழ்ப் பிராம்மணருமாக 512 பேர் இருந்து வந்தனர். தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவர் என்பது போல. இவர்களது அன்றாடப் பணிகளாவன. (1) அனுமேசர் பூஜை (2) இராமநாதசுவாமி பூஜை (3) மலைவளர் காதலி அம்மன் பூஜை (4) ஸ்படிகலிங்க பூஜை (5) இராமநாதசுவாமி உற்சவ விக்கிர பூஜை (6) தாண்டேசுவரர் பூஜை (7) தேவை அம்பலவானர் பூஜை (8) பல்லக்கு நாயகர் பூஜை (9) வெள்ளை துர்க்கை அம்மன் பூஜை (10) பரிவார தேவதைகளுக்கு நைவேத்தியம். திபாராதனை செய்வது (11) திருவாபரணம் சாத்துதல் ஆகியன. குறிப்பிட்ட காலங்களில் இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக இவர்களுக்கு மூன்றுக்கு ஒரு பிரசாதமும், சந்தனம் பத்துக்கு ஒன்றும் தோசை, வடை பணியாரம் பத்துக்கு ஒன்றும். வெற்றிலை பாக்கு ஏழு நாட்களுக்கு ஒரு நாளும். மாதம் ஒன்றுக்கு ஏழு படியும் திருவிழாக்காலங்களில் பஞ்சாமிர்தம் செய்து வைப்பதில் ஒரு பணமும் கும்ப தட்சினையும். கால்படி அபிசேகமும் உண்டியல் வதுவில் சுவாமிக்கு இரண்டு பங்கும் இவர்களுக்கு ஒரு பங்கும் என நிகுதி செய்யப்பட்டு இருந்தது. இவர்களில் இன்னொரு பிரிவினரான தானத்தார் திருமஞ்சன நீராட்டிற்குத் திர்த்தம் கொண்டு வருதல், தெய்வத்திருமேனிகளுக்குத் திருமஞ்சனம் செய்வித்தல், து பதிபம், கட்டளைகள் எடுத்துக் கொடுத்தல். சுயம்பாகம் செய்து நைவேத்யம் முடிந்த பிறகு சன்னதிக்குக் கொண்டு வருதல். பரிவார தேவதைகளுக்கு அபிஷேகம், நைவேத்தியம்