பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|(}2 இராமர் செய்த கோயில் பல நல்ல பணிகளை மேற்கொண்டிருந்தார் என்பதை கி.பி.1780. கி.பி.1786-ல் தங்கச்சிமடம் கிராமத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் இருந்து தெரிய வருகிறது.' அங்கே சேதுயாத்திரை பயணிகளுக்காக அமைக்கப் பட்ட திர்த்தக் கட்ட அமைப்பிற்கும் அங்கு அடக்கம் பெற்றுள்ள இஸ்லாமியத் துறவியின் சமாதியில் கட்டுமானம் அமைக்க '- திருங் ஆ - ந்துக் கல் - சகங்கள் التي த்தின் T. தவியதையும் இந்தக் கல்வெட்டு வாசகங்கள் தெரிவிக்கின்றன இவ்விதம் இராமேசுவரம் திருக்கோயிலின் இராமநாத பண்டாரத்தின் பதவி. ஏறத்தாழ முன்னு று ஆண்டுகள் நீடித்து வரலாறு படைத்தது என்பதைச் சேதுபதி மன்னரது செப்பேடுகளும். தமிழக அரசின் ஆவன க் காப்பகக் கோப்புகளும் தெரிவிக்கின்றன. கி.பி. 19வது நூற்றாண்டில் கி.பி. 19வது நூற்றாண்டில் இந்தப் பணியில் இருந்தவர்களது பணிக்கால நடவடிக்கைகள் அவர்கள் பொறுப்பேற்று இருந்த புனிதப் பணிக்கு இழுக்கை ஏற்படுத்துவதாகவும் அந்தப் பதவியில் இருந்த முன்னவர்களது செயல்பாடுகளுக்கு முரணாகவும் அமைந்து விட்டதை அறியும் பொழுது இந்தப் பண்டார சன்னதியிடம் யாரும் வெறுப்புக் கொள்ளாமல் இருக்க முடியாது. அரசியல் மாற்றங்களி னால் நாட்டிற்கும் மக்களுக்கும் பின்னடைவு ஏற்படும் பொழுது கோயில் பணியாளர்கள் சுயநலமும், பதவி ஆசையும் கொண்டு ஆடம்பரப் பிரீதி மிக்கவர்களாக மாறுவது. பொது வாழ்வு பற்றிய கசப்பான படிப்பினைகளை அறிவுறுத்துவதாக உள்ளது. தமிழக வரலாற்றில். ஆற்காடு நவாப் என்ற அரசியல் சக்தி, பதினெட்டாவது நூற்றாண்டின் பிற்பகுதியில் வளர்ந்து 1) ஆவணம் ஆண்டு இதழி தஞ்சாவூர் பக்கம் எண். 1998