பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| ()–: இராமர் செய்த கோயில் இடைப்பட்ட காலத்தில் (கி.பி.1772 - 81) அப்போது இருந்த இராமநாத பண்டாரம் நாற்பதினாயிரம் பக்கோடா பணத்தை கையாடல் செய்து இருப்பது அறிந்து பண்டாரத்தைப் பணிநீக்கம் செய்து அவருக்குப் பதிலாக ரகுநாத குருக்கள் என்பவரைக் கோயில் நிர்வாகியாக நியமனம் செய்தார்.' அடுத்து மடத்து முறைப்படி நான்கே வயதான சின்ன இராமநாதனை இராமநாத பண்டாரம் என நியமனம் செய்துவிட்டு அன்றைய இராமநாத பண் டாரம் இறந்துவிட்டார். கி.பி.1793ல் சேதுபதி மன்னர் இந்தச் சுவீகாரத்தை அங்கிகரித்ததுடன் பால்ய பண் டாரத்தின் சார்பாக அவரது தந்தை தில்லை நாயகத்தை கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வருமாறு செய்தார். ஆனால் கி.பி.1795 ல் ஆற்காடு நவாப்பின் மேலாண்மையைப் புறக்கணித்து. தங்களது படை வலிமையினால், புதிய அரசியல் ஆளவந்தார்களாக மாறிய ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் சேதுபதி மன்னரை பதவி நீக்கம் செய்து திருச்சிராப்பள்ளிச் சிறையில் மீண்டும் அடைத்தனர். கருப்பு ஏடு மறவர் சிமையில் தொடர்ந்த அரசியல் குழப்பங்கள். மக்கள் கிளர்ச்சிகள் ஆகிய சூழ்நிலைகள் சேது இராமநாத பண்டாரம் சுயநலத்தை வளர்த்துக் கொள்ளவும். கோவில் பதவரியைக் சிறுமைப்படுத்துவதற்கும் பயன் பட்டன. திருக்கோயில் பணமும் திருவாபரணங்களும் இராமநாத பண்டாரத்தின் சொந்த சொத்துக்களாயின. குதிரையில் அமர்ந்து மன்னரைப் போல வீதி உலா வந்தார். மடத்திற்குப் பதில் மாளிகையில் தேவதாசிகளுடன் கும்மாளம் கொட்டினார். மதுரை. நெல்லைச் சிமைகளில் இருந்து நாட்டிய நங்கைகள் வர வழைக்கப்பட்டு தினகர் அத் தாக் கக் களிப்பட்டும் !」l-(り |) Pannelag Price political kinship and the colonial India (1990)