பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் |0.5 கைங்கரியத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். கி.பி. 1816-ல் சின்ன இராமநாதனது காலம் வரை இந்தத் திச்செயல்கள் நடைபெற்றன. இதற்கிடையில் இராமநாதபுரம் ஜமீன்தார்களாக இருந்த ராணி மங்களேஸ்வரி நாச்சியாரும். இராமசாமி சேதுபதியும் மதுரை சிமைக் கலைக்கடருக்குச் சின்ன ராமநாதனது செயல்பாடுகள். கையாடல். கோயில் கடமைகளை நிறைவேற்றாத நிலை பற்றிப் பல புகார்கள் அனுப்பியும் நிலைமை சிரடையவில்லை. கி.பி.1815-ஆம் வருட வரைவோலை ஒன்றின் படி சின்ன இராமநாத பண்டாரம் ரூ.1,40,000/- வரை இராமேசுவரம் திருக்கோயில் நிதியைக் கையாடல் செய்து கோவிலுக்கு இழப்பு ஏற்படுத்தி இருந்ததாகத் தெரிகிறது.' கோயிலுக்குச் சொந்தமான நகைகள். முத்துமாலைகள் ஆகியவைகளைத் தேவதாசிகளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தது. புதிய பங்களா கட்டியது. புதிய அலங்கார வண்டிகளைச் செய்தது ஆகியவைகளுடன் கோயில் திருவாபரணங்களை ரூ.64.000/-க்கு ஈடு வைத்தது என்பன போன்ற இனங்கள் இந்த இழப்பில் அடங்கும் இந்தப் பண்டாரத்தை அடுத்து கி.பி.1819இல் பணியேற்ற வெங்கடாசலம் என்பவர் சேது இராமநாத பண்டாரம் எனத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டதுடன். இராமநாதபுரம் சேதுபதிகள் இராமேசுவரம் திருக்கோயில் தர்மகர்த்தாக்கள் அல்ல என்று கூறிப் பல வழக்குகளில் வாதாடினார். இவைகளுக்கு ஆதரவாகக் காட்டுவதற்கு ஏற்கனவே திருக்கோயிலில் உள்ள பதினெட்டாவது து ற்றாண் டுச் சிற்பங்களை சிதைத்தும் மன்னர் முத்து விஜயரகுநாத சேதுபதி சிலைகளுக்குத் தாடியும். மீசையும் பொருத்தி உருமாற்றம் 1) Pamela Price G. Kinship and the colonial rule in India (1990) 2) Pamila Price G. Kinship and the colonial rule in India (1990)