பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் |07 இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தப் புரட்சிதரப் பண்டாரங்களை ஆதரித்துக் கோயில் குருக்களும். நயினாக்களும், ஸ்தானிகர்களும், தங்களது தகுதிக்கும் பணிக்கும் இழிவு - ஏற்படுத்துமாறு நடந்து கொண்டது ஆகும். மதுரைச் சிமை கலைக்டர்களாக ரூயிஸ்பீட்டர் விவாஸ், சுல்லிவன் ஆகியோரும் சென்னைக் கோட்டையில் இருந்த கும்பெனித் தலைமையும், வரலாற்றையும் நடைமுறையையும் மறந்து இந்தப் புதிய வரலாறு படைத்த தர்மகர்த்தாக்களது நடவடிக்கைகளை ஊக்குவிப்புச் செய்யும் வகையில் நடந்து கொண்டனர். அதனால் கம்பெனியார்களது நீதிமன்றத் திர்ப்புரைகளும் நியாயமற்ற முறையில் வெளியிடப்பட்டன. இந்தப் பரங்கிகளது பகல் கொள்ளையும். அதிகார ஆர்ப்பாட்டங்களும் புனித சேது நாட்டில் நடைபெறுவதற்கு அணு அளவு கூட இடம் கொடாது எதிர்த்த மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் வழிவந்த ஆட்சியாளர்களைப் பழிவாங்கி இழிவு படுத்த வேண்டும் என்பது அவர்களது ஆசை போலும். ஆனால் வாய்மையே வெல்லும் என்ற நியதிக்கேற்ப மன்னர் பாஸ்கர சேதுபதியின் காலத்தில் மதுரை கிழக்கு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையொன்றை 16.08.1895ம் தேதி பிறப்பித்தது. அதில் அப்பொழுது இருந்த சாமிநாதபிள்ளை என்ற பண்டாரத்தை நீக்கிவிட்டு மன்னர் பாஸ்கர சேதுபதியினைக் கோயில் அறங்காவலராக அங்கிகரித்து உத்திரவிட்டது.' புதிய கோயில் நிர்வாகி இதனால் இராமேசுவரம் திருக்கோயில் ஆதினகர்த்தர் பதவிக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. பவத்திரமான தெய்வீகப் பணிக்கெனக் கி.பி.1604-ல் சடைக்கன் உடையான் சேதுபதியால் ஏற்படுத்தப்பட்ட ፴ነ off No ! பண்டாரத்தின் வழியினர் இராமேசுவரம் திருக்கோயிலின் 1) காங் டாக்டர் எஸ்.எம் - பன்னர் பாஸ்கா சேதுபதி