பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|[]S இராமர் செய்த கோயில் பெருமைக்கும் கோயிலின் சொத்துக்களுக்கும் ஏற்படுத்திய இழப்பும், களங்கமும் வரலாற்றில் அகற்ற முடியாத கரும்புள்ளிக் கறையாக நிரந்தரமாக நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை மிகச் சிறந்த சைவ சித்தாந்தியும் இந்து சமய சாத்திரங்களில் முழுமையாக தோய்ந்து நின்ற இளம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் இந்தத் திருக்கோயிலின் நடைமுறைகளில் பழமையுடன் புதுமையும் பொலிந்து ஆகமச் சிறப்பை வெளிப்படுத்தும் வண்ணம் திகழப்பாடுபட்டார். பூசனைகளும், விழாக்களும் ஆகம நெறிகளின் படி நடைபெற வேண்டும் என்பது அவரது உறுதியான கருத்து கோயில் தர்மகர்த்தா என்ற முறையில் மன்னர் அவர்கள் இராமேஸ்வரம் இராம மந்திரத்தில் தங்கியிருக்கும் பொழுதுதெல்லாம் அர்த்த ஜாம பூஜைகளில் கலந்து கொண்டு களிப்பு எய்தியதுடன் பூஜையின் முடிவில் சுவாமியைச் சப்பரத்தில் அமர்த்தி வைத்துப் பள்ளி அறைக்கு எடுத்துச் செல்லும் பொழுது மன்னர் அவர்கள் இந்தக் கோயிலின் பணியாட்களைப் போன்று தி வெட்டிச் சுழுந்தை ஏந்தியவாறு பய பக்தியுடன் சுவாமிக்கு வழிகாட்டிச் செல்லும் பணியை மேற்கொண்டிருந்தார். “இறைத் தொண்டில் மன்னரும் மற்றவரும் சமமானவர்கள் தானே ויי ஆண்டு தோறும் மகோதைய நாளன்று தனுஷ் கோடியில் பிதிரர்களுக்காக கடலில் நீராடி முடித்த பக்த கோடிகள் பதினைந்து கல் தொலைவில் நடந்து வந்து இராமேஸ்வரம் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. இதனால் பக்தர்களுக்கு ஏற்படும் இடர்ப்பாட்டினை அகற்றும் நோக்கத்துடன் மன்னர் அவர்கள் தை. அமாவாசை மகோதைய நாளன்று சுவாமியும், அம்பாளும், தனுர்ைகோடி திர்த்தக்கரைக்கு எழுந்தருளி இறை 1) கமால் டாக்டர் எஸ்.எம். மன்னர் பாஸ்கர சேதுபதி