பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் |(}) அடியார்களுக்குத் தரிசனம் அளிக்கும் ஏற்பாட்டினைச் செயதார். அன்றைய கோயில் நடைமுறைகளுக்கு இந்த நிகழ்ச்சி புதுமையானதாக இருந்தாலும் பக்தர்களது நலன் கருதிப் புகுத்தப்பட்ட நிகழ்ச்சியாகும் இது. இன்னும் மன்னர் அவர்கள் திருக்கோயிலின் அன்றாட நடைமுறைகளில் புகுத்திய பல மாறுதல்கள் கோயில் பணியாளர்களான பூஜகர்கள். ஸ்தானிகர்கள், நயினாக்கள். போன்றவர்களுக்கு மிகுந்த வெறுப்பையும், எரிச்சலையும். ஏற்படுத்தின. மன்னர து நிர்வாகத்திற்கு முன் இருந்த பண்டாரங்களின் நிர்வாகத்தில் எவ்வித கட்டுப்பாடும் கண்காணிப்புமின்றி பொழுது போக்காக இயங்கி வந்த இந்தப் பணியாளர்கள் மன்னருக்கு எளிதாகக் கலகக்கொடி துக்கினர். இந்து சமூகத்தின் மிகவும் பிற்படுத்தப்பட்ட குலத்தினரான - மறவர் இனத்தைச் சார்ந்த - மன்னர் பாஸ்கர சேதுபதி திருக்கோயிலின் தர்ம கர்த்தாவாக இருப்பதற்கு தகுதியற்றவர் என்பது தான் அவர்களது முதலும் முடிவுமான ஆட்சேபனை ஆகும். கி.பி. 19ம் நூற்றாண்டின் இறுதியில் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்ட பார்ப்பனர்கள் பிறப்பால் உயர்த்தவர்கள் என்ற வெறியினால் இயங்கி வந்தனர் என்பதை இந்த நிகழ்ச்சி கோடிட்டுக் காட்டுகிறது. கி.பி. 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின் பொழுது இந்தச் சனாதனிகள் தாங்கள் உயர் குலத்தவர் என துரைத்தனத்தாரிடம் பல சலுகைகளைப் பெற்று வந்ததால் அவர்களது சாதி வெறி, மன்னர் பாஸ்கர சேதுபதியையும் மிகவும் தாழ்ந்தவராக கருதும் அளவிற்கு சென்று விட்டனர். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் சேதுபதிகளின் கருனையால் இராமேஸ்வரம் திருக்கோயிலில் முக்கியப் பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டவர்கள் என்ற வரலாற்றையும் மறந்து பாஸ்கா சேதுபதியை எதிர்ப்பதற்குக் கச்சை கட்டிக் கொண்டு நின்றனர்.