பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் || 3 ஆண்டுதோறும், அறுவடையின் பொழுது மகசூலில் இருந்து குடிகள் மன்னருக்கு இருக்கும் பங்கு தானியம் முழுவதும் இந்தத் திருக்கோயிலுக்குச் சேர்ந்து விடும். மேலும், இந்தத் கிராமங்களில் உள்ள பள்ளு, பறை மற்றும் குடிகள் அனைத்தும் மன்னருக்குச் செலுத்தி வந்த பல்வேறு வகையான பட்டடைகளும் திருக்கோயில் வருவாயாக அமைந்தன. «5}{60}6)ШШГT6)ШёUT கொடிக்கால்வரி. தட்டுவரி, பாசிவரி, புகையிலைவரி. வேண்டுகோள்வரி. பழவரி. கோசாலைவரி. நன்மாட்டுவரி, மானோம்புக் கிடாய்வரி. மகாநவமிக் கிடாய்வரி, தச்சர்வரி, சானார்வரி. கலவஈழம், பனங்கடமை. திருக்கைவரி. செக்குவரி, மனைவரி. கூரை வரி. மேலும் அம்பலம் காடு காவல். இடைகுடி வரி, கிதாரிவரி. துலுக்கர் தறிக்கடமை. கடைவரி. பறைவரி. முள்ளுவரி, காணிக்கை வரி. சுங்கம். மகமை என்ற கடமைகளும் அரசுக்குரியனவாக இருந்தன. திருக்கோயிலுக்குச் சர்வ மானியமான சேது மன்னர்களால் வழங்கப்பட்ட ஊர்களில் இருந்து தண்டல் செய்யப்பட்ட இந்த வரிப்பாடுகளும், திருக்கோயில் வருவாய்களாயின. இந்த வருவாய்கள் தாம் திருக்கோயிலின் பிரதான நிலையான வருவாய்கள் எனலாம். மற்றும் மேலே குறிப்பிட்டபடி. கோயில் உண்டியல்களில் வரப்பெறும் பனம். காணிக்கை ஆகியவைகளும். தோணித் துறைகளில் வழங்கப்படும் கடவுச் சிட்டுக்களின் பேரில் கிடைக்கும் கட்டணமும் கடை வீதிகளில் வது.விக்கப்படும் மகமை, அள்ளுத் திர்வை ஆகியவைகளும் திருக்கோயிலுக்கான வருவாய்களாக அப்பொழுது இருந்தன.