பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் || 5 போது உதவுவதற்காக - குறிப்பாக உண்ணும் உணவு. பருகும் நீரும் இளைப்பாறுவதற்கு இடமும் வழங்கும் பணிகளில் மிகுந்த அக்கறை கொண்டனர். இதன் காரணமாகச் சேதுநாட்டின் வடக்கு எல்லையான கோட்டைப் பட்டினத்தில் இருந்து தெற்கே தனுர்ைகோடி வரையிலான நெடுந்தொலைவில் பல அன்ன சத்திரங்களை ஏற்படுத்தினர். இராமநாதபுரம் சமஸ்தான மேனுயுவலின்படித் திருமலை இரகுநாத சேதுபதி (கி.பி.1640 - 76) ஆட்சிக் காலம் முதல் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் (கி.பி.1762 - 95) காலம் வரையிலான ஆட்சிக் காலத்தில் 47 அன்ன சத்திரங்கள் ஏற்படுத்தி சேதுயாத்திரை மேற்கொண்டுள்ள பயணிகளுக்கு குடிநீரும் உணவும் உறையுளும் மூன்று நாட்கள் வரை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தனர். அந்த அன்ன சத்திரங்களின் பணி தொய்வில்லாமல் தொடர்வதற்காகச் சேதுபதி மன்னர்கள் பல கிராமங்களை இந்த அன்ன சத்திர பணிக்காகச் சர்வ மானியமாக வழங்கி வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட கிராமங்களிலிருந்து ஆண்டுதோறும் சேது மன்னருக்குக் கிடைத்து வந்த அனைத்து வகையான அரசு இறைகளும் வரிப்பாடுகளும் திர்வைகளும். இந்த சத்திரங்களுக்கு உரியனவாகச் செய்யப்பட்டன. இவ்விதம் சேது மன்னர்கள் அன்னதானப் பணிக்கென ஏற்படுத்திய அன்ன சத்திரங்களும் அவைகளுக்காகச் சர்வ மான்யமாக வழங்கப் பெற்ற கிராமங்களும் பட்டியலிட்டுத் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.