பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. எஸ்.எம். கமால் |2 சொற்பமாக விரல்வசிட்டு எண்ணும் அளவிற்குக் குறைவாக உள்ளன. இத்தகைய அவல நிலைக்கு இரண்டு காரணங்கள் ஆதார மாக அமைந்து இருக்கின்றன முதலாவதாக இராமேசுவரம் திருக்கோயில் வங்கக் கடலின் கடற்கரைக்கு அண்மையில் அமைந்து இருப்பதால், கடலில் இருந்து நாள்தோறும் வீசுகின்ற கடுமையான உப்புத் தன்மை நிறைந்த காற்று இந்தக் கல்வெட்டுக்களைப் பல நூற்றாண்டுக்காலமாக தனது அமிலத்தன்மையினால் அழித்து வந்துள்ளது. இந்த அழிமானத்திலிருந்து இந்தக் கல்வெட்டுக்களை காத்துவர ஆலய நிர்வாகத்தினர் தக்க நடவடிக்கை எடுக்கவரில்லை. கல்வெட்டுகள் வரலாற்றிற்கு எவ்வளவு முக்கியம் என்ற வரலாற்று உணர்வு இந்தக் கோயிலின் தக்கார்கள். அலுவலர்கள் ஆகியோரிடம் இல்லாததே இப்பெருங்குறை. இதே கடற்கரைப் பகுதியில் உள்ள திருப்புல்லானி ஆதி ஜகன்நாத பெருமாள் ஆலயத்திலும் திருஉத்திரகோசமங்கை சமஸ்த்தான சத்திரத்திலும் உள்ள கற்சிலைகள் இந்த பங்காற்றினால் அழிக்கப்பட்டு உருவத்தை இனம் கண்டு கொள்ள முடியாமல் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய அரசின் தொல்லியல் அளவிட்டுத் துறையினர் கி.பி.188.1. கி.பி.1903. கி.பி.1905. கி.பி.1913. கி.பி.1915 ஆகிய ஆண்டுகளில் இந்தக் கல்வெட்டுக்களை ப் படியெடுத்து வெளியிட்டுள்ளனர். இவை தமிழ். சமஸ்கிருதம், கன்னடம், பாலி மொழிகளிலமைந்த கல்வெட்டுக்களாகும். இவைகளில் தொன்மையானது சுவாமியின் கருவறை துழைவாயிலில் இராஷைடிர கூட மன்னன் கண்ணதேவன் எனப்படும் மூன்றாம் கிருஷ்ணன் வெட்டுவித்த கி.பி.910ஆம் ஆண்டு கன்னடமொழிக் கல்வெட்டாகும். இதனடையடுத்த பழமையான கல்வெட்டு கோயில் கொடிமரத்தின் கிழ்ப்பகுதியில் சிங்கள மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாகும். இதனை வெட்டுவரித்தவன் இலங்கை மன்னன் நிச்சங்க மல்லன். கி.பி. 1169-க்கும் கி.பி.1190க்கும் இடைப்பட்ட இருபது ஆண் டுகளில் மதுரைப் பாண்டியர்களிடையே உட் பூசலும் முதலாவது குலோத்துங்க