பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XIII இறைவனான மகா விஷணுவின் அவதாரமாகிய இராமன் மீது தாளாத பக்தியும். மீளாத காதலும் கொள்ளச் செய்து தன்னகத்தே கவர்ந்திழுக்கும். சந்திர காந்தக் கல்லாக அமைந்துள்ளது. பாரத சமுதாயத்தின் பல்வேறு வாழ்க்கை நிலைகளில் உள்ள பக்த கோடிகளது பேச்சும். மூச்சமாக விளங்கும். இராமேஸ்வரத் திருத்தலத்தைப் பற்றி மக்கள் அனைவரும் மேலும் மிகுதியான செய்திகளைத் தெரிந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும். நமது கடந்த காலப் பழமையையும். நிகழ்காலப் பெருமையையும் நினைத்து நமது நாட்டின் சமய நம்பிக்கையிலும். ஆ ப ப ஒற்றுமையிலும். மக்களின் சிந்தனைகளை ஒன்றுபடச் செய்ய வேண்டும் என்ற இலக்கில் இந்தச் சிறிய நூல் படைக்கப்பட்டுள்ளது. கடந்த 1800 ஆண்டுகளில் வரலாற்றில், புரான. இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டு வந்துள்ள இராமேஸ்வரம் திருக்கோவில் பற்றிய மக்கள் சமுதாயத்தின் பக்திப் பூர்வமான செயல்கள் ஆகியன இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இந்திய நாட்டின் பாரம்பரியப் பெருமையிலும், சமுதாய ஒற்றுமையிலும். மாண்பான மனிதநேயத் தொண்டுகளிலும் மக்களை மேலும் அர்ப்பணிக்கச் செய்ய வேண்டும் என்பதே இந்த நூலின் இலக்கு ஆகும். அதனை நடைமுறைப்படுத்த மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழைப்பது அவர் தம் I, Լ- մl LI), டாக்டர் எஸ்.எம். கமால், நூலாசிரியர்