பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 3 (, இராமர் செய்த கோயில் பரந்த நெற்றி, அகன்ற கண்கள். குழைக்காதுகள். நீண்ட ஒல்லியான கரங்கள், கால்கள் ஆகிய கேசாதி பாதங்கள் போன்றவற்றின் அமைப்பைக் காணும்பொழுது சோழமண்டல ஸ்தபதிகள். கம்பஇராமாயணம் இயற்றப்படுவதற்கு முன்னரே இராமாகாதையை அறிந்து அந்த இலக்கியப் பாத்திரங்களின் படைப்பைச் சிறப்பாக அறிந்து இருந்தனர் என்பதை இந்தச் செப்புச் சிலைகள் தெரிவிக்கின்றன. இந்தச் செப்புத் திருமேனிகள். மென்மையும் கவர்ச்சியும் மிடுக்கும் நிறைந்து வில்லைப் பற்றிய வீரர்களாகக் காட்சியளிக்கும் இராம இலக்குவர்கள். இடப்புறம் சற்று ஒரத்தில் ஒய்யாரமாகக் காணப்படும் சிதாப்பிராட்டியையும் இந்த இராமேசுவரம் செப்புத் திருமேனிகள் அப்படியே பிரதிபலித்தாலும் இவை காலத்தால் சற்று முன்னதாக அமைந்தவை என்பதை யாரும் மறுக்க முடியாது. மற்றும் மேலே குறிப்பிட்ட துர்க்கை. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கி.பி.1645 முதல் கி.பி.1676 வரை சேது நாட்டின் ஆட்சி பீடத்தில் இருந்த திருமலை இரகுநாத சேதுபதி மன்னர் ஏனைய சேது மன்னரைப்போல அழுத்தமான சிவபக்தர். இராமேசுவரம் இராமநாதசுவாமியிடமும் திருப்பெருந்துறை ஆவுடையப் பரிடமும் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார். கி.பி.1658-ல் அவர் மதுரை மீது படையெடுத்த கன்னடப்படைகளை வெற்றி கொண்டதால். மதுரை திருமலை நாயக்கர் ராஜராஜேஸ்வரியின் பொற் சிலையொன்றை அவருக்குப் பரிசுப் பொருளாக அளித்ததும் அதற்கு இராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் கோயில் ஒன்றை அமைத்தார். தொடர்பாக அடுத்து மூன்று கோயில்களை கொற்றவைக்கு சேது நாட்டில் நிறுவினார். இராஜ துர்க்கைக் கோயில் இராமநாதபுரம் (இராமநாதபுரம் கோட்டைக்கு கிழக்கே). வன சங்கரி அம்மன் கோயில் (இராமநாதபுரம் கோட்டைக்குத் தெற்கே கோட்டைச் சுவரை அடுத்து) மேலச்சிறுபோது