பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - V11 இராமேஸ்வரம் நகரைச் சுற்றியுள்ள புனிதத் தலங்கள் இராமேஸ்வரம் என்ற பெயர் இதிகாசத்தை ஒட்டி எழுந்த பெயராகும். இராமபிரானது ஈஸ்வரனுடைய கோயில் என்பது பொருள். பின்னர் இக்கோயிலையுடைய ஊர் என்ற பொருளில் இராமேசுவரம் என்ற பெயர் வழக்கிற்கு வந்துள்ளது. தேவார காலத்திற்கு முன்னர் இந்தப் பெயர் வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை. கடைச் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பெறும் மதுரை. குமரி, உறந்தை. புகார் போன்ற பெயர்களாக அந்த இலக்கியங்களில் இந்த ஊர்ப் பெயரும் இடம் பெறவில்லை. இராமேஸ்வரம் திவு முழுவதிலும் உள்ள ஒரே ஊராக பல நூற்றாண்டுகளாக இந்த ஊர் இருந்து வந்துள்ளது. கடந்த சில நூற்றாண்டுகளில் இந்தத் திவில் இராமேஸ்வரம் கோவிலுக்கு அண்மையிலும், சேய்மையிலும் பல ஊர்கள் எழுந்து உள்ளன. குறிப்பாக இராமேஸ்வரம் திவின் கிழக்குக் கரைக்கோடியில் தனுஷ்கோடியும். அதற்கு முன்னர்க் கோதண்டராமர் கோயில், நடராஜபுரம், வேர்க்கோடு. விவேகானந்தபுரம், கரையூர் ஆகியனவும் உள்ளன. இன்னும் இந்தக் கிழக்குக் கரையின் வடபகுதியில் சுடுகாட்டுப்பட்டி, ஒலைக்குடா. தர்கா. மாங்குண்டு. பத்தினிக் கோயில் ஆகியனவும் உள்ளன. இராமேஸ்வரத்திற்கு தெற்கே ஆபில் - காபில் தர்கா. நம்புநாயகி கோயிலும். மேற்கே