பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ எஸ்.எம். கமால் |39) செம்மாமடம் என்ற செம்மனத் தேவர் மடம், பேய்க்கரும்பு. அரியான் குண்டு. ஏ. காந்த ராமர் கோயில், தங்கச்சிமடம். அக்காள் மடம். பாம்பன். குந்து கால் ஆகியனவும் இருந்து வருகின்றன. இவைகளில் சில ஊர்கள் மிகவும் புனிதமுடைய தலங்களாக போற்றப்பட்டு வருகின்றன. அவைகளைப் பற்றிய சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 1) தனுஷ்கோடி இராமேஸ்வரத்தில் இருந்து கிழக்கே 16 கல் தொலைவில் இந்த ஊர் உள்ளது. இராமபிரான் இலங்கை சென்று மீண்டும் வந்த பொழுது இங்கிருந்து இலங்கையை தொடர்புபடுத்தும் சேது அனையை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக தனது வில்லின் (தனுசு) நுனியைக் (கோடி) கொண்டு உடைத்து அழித்தாக ஐதிகம். இங்கே வங்கக்குடாக் கடலும். வங்க விரிகுடாக் கடலும் ஒருங்கிணைந்து சங்கமம் ஆவதால் இது ஒரு புனித திர்த்தக் கட்டமாகக் கருதப்பட்டு வருகிறது. இந்தக் கடற்கரையின்று காலை நேரத்தில் சூரிய உதயத்தையும். மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தையும் கண்டு களிக்கலாம். ஆடி. தை அமாவாசை நாள்களில் இங்கு உள்ள கடலில் நீராடி எழுவது பிதிர்களுக்கு ஏற்ற புண் ணியமாகக் கருதப்படுகிறது. இங்குச் சேது மாதவப் பெருமாள் என்ற பெயரில் பூரீ ராமனுக்கு ஒரு திருக்கோயில் இருந்து கடலில் ஆழ்ந்து விட்டது. இந்தத் தலம் வைணவர்களால் ஏற்றிப் போற்றப்படும் நூற்றி எட்டுத் திருப்பதிகளில் ஒன்றாகக் குறிக்கப்படாவிட்டாலும் இந்தத் தலத்தை வைணவர்கள் வெகுவாகக் கொண்டாடி வந்தனர். 23.4.1964ம் தேதி இரவு ஏற்பட்ட புயலினாலும், கடல் கொந்தளிப்பினாலும் இந்த ஊர் முழுமையாகக் கடலுக்குள் மறைந்துவிட்டது. மிகச் சிறப்பான திர்த்தக் கட்டமாக விளங்கிய சேது திர்த்தமும் கடலால் அழிக்கப்பட்டு விட்டதால்