பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|-|() இராமர் செய்த கோயில் இராமேஸ்வரத்தில் உள்ள அக்னி திர்த்தம் இப்போது சேது திர்த்தமாகக் கருதப்படுகிறது. 2) கோதண்டராமர் கோவில் இந்த ஆலயம் இராமேஸ்வரத்திற்குக் கிழக்கே இரண்டு கல் தொலைவில் உள்ளது. பெரும்பாலும் ஆண்டு முழுவதும் உப்பங்கழியினால் சூழப்பட்டு உள்ள இந்தக் கோயிலை அண்மைக் காலத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வாங்கூர் அறக்கட்டளையினரால் திருப்பணி செய்யப்பட்டு மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. இதிகாசமாகிய இராமாயணத்தில் தனது சகோதரரான இராவணனுடன் கருத்து வேற்றுமை கொண்ட வீடனன் இராவணனது அணியிலிருந்து பிரிந்து வந்து இந்த இடத்தில் இராமபிரானிடம் சரண் அடைந்து அடைக்கலம் பெற்றான் என்பது ஐதிகம். இதனைக் குறிக்கும் வகையில் இங்கு ஆயுதபாணியான இராமனது (கோதண்டராமனது) பெயரில் இந்தக் கோயில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் இராமேஸ்வரத்திலிருந்து பூரீ ராமநாதசுவாமி எழுந்தருளிப் பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்து வருகிறார். 3) ஆபில் காபில் தர்ஹா இந்தப் புனித இடம் இராமேஸ்வரம் நகரின் தென்பகுதியில் ரயில் நிலையத்திற்குத் தெற்கே உள்ளது. மனித குலத்தின் ஆதி பிதாவான ஆதம் ஹவ்வா. அம்மையாருக்குப் பிறந்த முதல் மக்களான ஆபில். காபில் என்ற சகோதரர்களது அடக்கவிடமாக இந்த இடம் கருதப்படுகிறது. கிழக்கு மேற்காக 40 அடி நீளத்தில் அமைக்கப் பெற்று இங்குக் காணப்படும் இரண்டு சமாதிகள் அந்தச் சகோதரர்களுடையனவாக பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வருகின்றன. இந்தச் சகோதரர்களைப் பற்றிய செய்திகள் கிறிஸ்தவ சமய நூலான பைபிளிலும் (பழைய ஏற்பாடு) இஸ்லாமியரது திருமறையான