பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் |53 அப்பொழுது மக்களுக்காக இங்கு தொழுகைப் பள்ளி ஒன்றை அமைத்தான். அதனை கி.பி. 1318-ல் இங்கு வந்த மற்றொரு தில்லி தளபதி குஸ்ராக்கான் பழுது பார்த்தான் என்பது ஆசிரியர் எல்பின் ஸ்டோன் வழங்கும் வரலாற்றுக்குறிப்புகள்.' இன்னொரு வரலாற்றுச் செய்தியின்படி இங்கு இருந்த இஸ்லாமியர் கடல் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர் என்பதும் இவர்களது முத்துக்கள் இராமேஸ்வரம் நன்முத்துக்கள் என வழங்கப்பெற்றுக் கேரளக்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள கொல்லம் துறைமுகம் வழியாக மேலைநாடுகளுக்கு அனுப்பப்பட்டன: இன்றும் இராமேசுவரம்நகரில் “முத்துச்சாவடி" என்ற பகுதி இருந்து வருவதும் இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக இங்குள்ள இந்து சமய மக்களுடன் இவர்கள் கலந்து பழகி வாழ்ந்து வருவதுடன் சங்கு. சோவி. அரிய கடல் தரும் பொருள் வாணிபத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இராமேஸ்வரம் திருக்கோயில் தெப்பத் திருவிழாவிற்கு இவர்கள் தொன்றுதொட்டு படகுகள் கொடுத்து வருவதும் இந்த கைங்கரியத்திற்காக இவர்களுக்கு ஆண்டுதோறும் திருக்கோயிலில் இருந்து வத்திரப்பாடி, முதலிய சம்பாவனைகள் கொடுக்கப் பெறுவதும், பொங்கல், திபாவளி போன்ற சிறப்பான நாள்களுக்கு கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்பெறுவது போல ஒரு குறிப்பிட்ட மரைக்காயர் குடும்பத்தினருக்கு எண்ணெய். பச் சரி சி. புதுப்பானை போன்ற திருவிழாச்சிர்கள் ஆண்டுதோறும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதும் ஆகும். 1) Elph instone - Denasities of South India. 2) Appadurai Dr. Economical condition of Tamil Nadu (AD 1000 - 1300)- (1930) - Volume II