பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 3. சோ ழனும், பாண்டியனும் இணை ந து தத்தம் இலச்சினைகளான புலியையும். மீனையும் இமயத் தொடரில் பொறித்ததாகப் புலவர் ஒருவர் பாடியுள்ளார்.' இத்தகைய தமிழ் இலக்கிய வரலாற்றுச் செய்திகளில் சிறப்புற்ற இமயத்தைத் தங்களது ஆட்சிக்கு வரம்பாக இன்றைய அரசியலாரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஆன்மீக உணர்வுமிக்க முந்தையோர் சேது முதல் இமயம் என்ற வழக்கைப் பயன்படுத்தினர். 'ஆ சேது ஹிமாலயம்” என்பது இதே பொருளின் சமஸ்கிருதப் பிரயோகம் ஆகும். அப்படியானால் சேது என்பது என்ன? எதைக் குறிப்பிடுகிறது? அது எங்கே உள்ளது? அதன் சிறப்பு எது? என்பதைப் பார்ப்போம். நமது நாட்டு இதிகாசமாகிய இராமாயணக் கதையின் கொடு முடியாக விளங்கும் நிகழ்ச்சி இராம-இராவண யுத்தம். இராமபிரான் இலங்கையை எய்துவதற்கு கடலில் அமைக்கப்பட்ட அனை சேது என குறிப்பிடப்படுகிறது. இராவணன் என்ற திமையை வெல்வதற்கு இராமன் என்ற நன்மையின் திருவுருவிற்குத் துணை நின்று கடலடைத்த காரணத்தினால் இந்தத் திருவனை புனிதம் பெற்றதாகப் போற்றப்பட்டு வருகிறது. நூறு யோசனை துர நீளமும் பத்து யோசனை அளவு அகலமும் கொண்டதாக வான ரங்களினால் கடலில் அமைக்கப்பட்ட இத்திருவனையின் சிறப்பை எங்கனம் உரைப்பது? இராமனது வாக்கினையே கேட்போம் : ங் ங் ...நளனைக் கொண்டுகட்டுவித்த இந்த சேதுவைப் பார் சேதுபந்தனம் என்று போற்றப்படுவது. மூன்று உலகங்களாலும் பூசிக்கத்தக்கது. மிகவும் பவித்திரமானது. சகல 1. புறநானூறு பாடல் எண் 58