பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் |57 பகுதியிலும் தங்கச்சிமடம் பாம்பன் பகுதிகளிலும் கிறித்தவ வழிபாட்டுத் தேவலாயங்கள் அமையத் தொடங்கின. பொதுவாகக் கி.பி. 1964-க்குப் பிறகு தான் இராமேசுவரம் திவில் கிறிஸ்தவர்களது குடியேற்றம் அதிகரித்துள்ளது. இராமேசுவரத்தைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் வெளிநாட்டுச் செலாவணியைச் சம்பாதித்துக் கொடுக்கும் இரால் மீன்கள் மிகுதியாக அப்பொழுது கிடைத்தது அதற்கு முக்கியக் காரணமாகும். 6) தமிழ் ஆரியர் இராமேஸ்வரத்தில் தொன்று தொட்டு திருக்கோயில் பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் தமிழ்நாடு பிராம்மணர்கள். இவர்களை இராமேசுவரம் திருக்கோயில் ஆவனங்கள் தமிழ் ஆரியர் எனத்தெளிவாகக் குறிப்பிட் டுள்ளன. திருக்கோயிலின் பணிகளில் பிராம்மணர்கள் ஈடுபட்டு இருப்பது இயல்பான ஒன்றுதான். என்றாலும் இந்தக் கோயிலின் பூஜை, நைவேத்தியம், பரிசாரகம் போன்ற முக்கியப் பணிகளில் இன்னொரு வகை பிராம்மணர்கள் மேற்கொண்டு இருப்பது தான் இதற்குக் காரணம், அவர்கள் மராட்டா குருக்கள் எனப்பட்ட பஞ்சதேசத்து ஆரியராவார். இவர்கள் இருவரும் இணைந்து திருக்கோயிலில் செயல்படுவது தொடர்ந்து வருகிறது. 7) மராட்டா குருக்கள் இவர்கள் மராட்டா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மராத்திய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்கள் இராமேசுவரத்தில் 512 பேர் இருந்தனர் என்பதைத் திருக்கோயில் ஆவனங்கள் குறித்துள்ளன. பதினெட்டாம் ங், ங் ** நூற்றாண்டின் தொடக்கத்தில் தேவை உலா என்ற சிற்றிலக்கியத்தைப் பாடிய மதுரை பல பட்டடை