பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் |59 பணியையும் சேதுபதி மன்னர்கள் மதித்துப் போற்றினர். இவர்களில் சிறப்புற்று இருந்த சங்கர குருக்களை திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் (கி.பி. 1658-ல்) இராமநாதபுரத்தில் புதிதாக பிரதிட்டை செய்யப்பெற்ற ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு "நவராத்திரி உத்சவம்' நடத்துவதற்கு நியமனம் செய்தார் என்ற செய்தி கி.பி.1658-ம் ஆண்டு செப்பேடு மூலம் தெரிய வருகிறது. இதனைப் போன்றே கிழவன் ரகுநாத சேதுபதி. இந்த மராட்டா குருக்களில் முதன்மை பெற்று இருந்த ரகுநாத குருக்கள் என்பவரை இராமேசுவரம் திருக்கோயில் சேதுபதி மன்னர் கட்டளைகளைச் சிறப்பாக நிறைவேற்ற நியமனம் செய்து இருந்தார் என்பது ஏற்கனவே குறிக்கப்பட்டுள்ளது. இவரைக் இரட்டைக்குடை இரட்டைத் திவெட்டி. அக்கி ரத் தாம்பூலம் போன்ற விசேஷ மரியாதைகளைக் கோவிலிருந்து பெறுவதற்கு உரியவராகச் செய்ததுடன் ஆண்டுதோறும் பொன்மகமையும் பெறுபவராக ஏற்படுத்தி இருந்தார். முதலாவது முத்துராமலிங்க சேதுபதி மன்னர் ஆட்சியின்போது (கி.பி.1762-1795) இராமேசுவரத்தில் சேதுபதி மன்னரும் அவரது குடும்பத்தினரும் சமயச் சடங்குகளை மேற்கொள்ளும் பொழுது. அவர்களுக்கு பிராயச்சித்தம் ஆகிய சடங்குகளை சேது மன்னருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் செய்து வைப்பதற்காக தாதாராம் பட்டர் மகன் ரகுநாத குருக்கள் நியமிக்கப்பட்டார் என்ற செய்தியும் உள்ளது. இவ்விதம் இந்த மராட்டா குருக்களுக்கும் சேதுபதி மன்னர்களுக்கும் இடையில் நல்ல அன்யோனியமான தொடர்புகள் நிலவி வந்தன.