பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 02 இராமர் செய்த கோயில் காளியத்தில் குறிப்பிடவில்லை. தேவாரத்தில் செய்யப்பட்ட இடைச்செருகல் எனவும் கருத்து உள்ளது. வால்மீகி வடமொழி இராமாயணத்திலும் இந்தச் செய்தி இடம்பெறவில்லை. 2) இராமபக்தர்களில் சிறந்தவர் இராமாயணக் கதை நமது நாட்டில் மட்டுமல்லாமல், தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து. கம்போடியா. ஜாவா, சுமத்ரா நாடுகளிலும் வழக்கிலும் எழுத்திலும் இருந்து வருகின்றது. நமது நாட்டைப் பொறுத்தவரையில் இக்கதை பல மாநில மொழிகளில் பல்வேறு இலக்கியங்களாகப் படைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சமஸ்கிருதம், தமிழ். இந்தி, தெலுங்கு. மலையாளம் போன்ற 22 மொழிகளில் உள்ள இராமகாதை இலக்கியங்கள் படித்த மக்களது இதயத்தை ஈர்த்து வந்துள்ளன. இதன் காரணமாகத்தான் ஆண்டு முழுவதும், பல மாநிலங்களில் இருந்து மக்கள் பக்தி உணர்வுடன் இராமநாதசுவாமி தரிசனத்திற்காக இராமேசுவரம் திருக்கோயி லுக்கு வருகை தருகின்றனர். இவர்கள் அனைவரிலும் மற்ற மாநிலத்தாரை விட ஆந்திர மாநில மக்கள். இராமபக்தியில் ஒருபடி மேலானவர்கள் என்று தான் குறிப்பிட வேண்டும். ஆந்திர மாநில பத்ராசலத்தில் தாசில் தாராக இருந்து பணியாற்றிய கோபண்ணா. அங்கு அரசாங்க பணத்தைச் செலவு செய்து இராமபிரானுக்கு கோயில் அமைத்தார் என்பது வரலாறு. இதனை அடுத்து இந்த நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் ஆந்திர மாநிலத்தில் இராமலிங்க சுவாமி பெயரால் பல திருக்கோயில்கள் நிர்மானிக்கப்பட்டு இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.