பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | 03 3) ராஜகோபுரம் இராமேஸ்வரம் திருக்கோயில் கட்டுமானப் பணிகள் ஏறத்தாழ 300 ஆண்டுகள் இடைவெளியில் பல சேது மன்னர் களால் அமைக்கப்பட்டன என்பதை முன்னர் பார்த்தோம். இரண்டாவது சடைக்கன் சேதுபதி இன்றைய இராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு ஏற்றம் தரும் வகையில் கிழக்கு நுழைவுவாயில் ராஜகோபுரம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும் என்று முயன்றார். கால்கோல் விழா நடைபெற்று கட்டுமானமும் தொடங்கியது. இந்தப் பணிக்கென இராமநாதபுரம் சமஸ்தானம் சாயல்குடி வட்டகையில் இருந்து கிடைக்கப்பெறும் வருவாய் அனைத்தையும் இந்தத் திருப்பணியில் சேது மன்னர் செலவழித்து வந்தார். இந்த மன்னரது புகழையும். வீரப் பொ விவையும் பொறுத்துக் கொள்ள முடியாத மதுரை திருமலை நாயக்க மன்னர் சேது நாட்டின் மீது பெரும் படையை கி.பி.1639ல் மேற்கொண்டார். கோவில் கோபுர கட்டுமானத்திற்கு இடையூறாக அமைந்தது இந்தப் போர். ஒராண்டு கழித்துப் போர் முடிவுற்று இயல்பு நிலை ஏற்பட்டாலும் சேது நாட்டில் அப்பொழுது ஏற்பட்ட பல விதமான இழப்புகளாலும் இந்தத் திருப்பணி நடைபெறவில்லை. அடுத்து கி.பி.1690-ல் கள்ளர் சிமை, சேது நாட்டிலிருந்து தனி நாடாகப் பிரிவினை பெற்றதும் கி.பி.1728-ல் சிவகெங்கைச் சிமை என்ற மற்றுமொரு தன்னரசும் மறவர் சிமையிலிருந்து தனியாகப் பிரிந்து ஏற்பட்டு சேதுநாட்டில் இயல்பான வலிமையும். பெருமையும் குன்றியதால் கி.பி.18ம் நூற்றாண்டின் இறுதிவரை இந்தக் கோபுரத் திருப்பணி தடைபெற்று நின்றுவிட்டது. பொதுவாகத் தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் இராஜகோபுரம் அமைக்கும் பணி கி.பி.10ம் நூற்றாண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சோழர்களும், நாயக்கமன்னர்களும் எழுநிலை அல்லது 11 நிலைகள் கொண்ட இராஜ கோபுரங்களை அமைக்கும் பணியைத் தொடங்கினர். இதற்கு எடுத்துக்காட்டாக