பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | 67 தெரிவிக்கின்றது. இவர்களில் சிறந்த மன்னர்களையும் ஆளுநர்களையும் மக்கள் தலைவர்களையும் வரலாறு இனங்காட்டியுள்ளது. கிழே கண்டுள்ள பட்டியல் அந்தப் பெருமக்களின் பெயர்களைத் தெரிவிக்கின்றன. 1. கி.பி. 86.1 இராஷ்டிர கூட மன்னன் மூன்றாவது கிருஷ்ணன் வருகையும் கண்டமார்த்தாண்ட ஆலய அமைப்பு 2. ն) լ Ո, 970 பராந்தக சோழன் வருகை துலாபார தானம் 3. கி.பி. 1169 பராக்கிரம பாண்டியனுக்கு உதவ வந்த வேங்கைப் படைகள் இராமேஸ்வரத்தில் கரையிறங்குதல். 4. கி.பி. 1190 நிசங்க மல்லனும் அவனது இலங்கைப் படைகளும் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கை திரும்புதல். 5. கி.பி. 1311 தில்லி தளபதி மாலிக்காபூரின் சூறாவளிப் பயணம் 6. கி.பி. 1318 தில்லி தளபதி குஸ்ராகான் இராமேஸ்வரம் வந்து திரும்புதல். 7. கி.பி. 1404 விஜய நகர மன்னர் இரண்டாவது ஹரிஹரர் இராமேஸ்வரம் வருகை 8. கி.பி. 1408 வரிஜய நகர ஆளுநர் கோப்பதிப்பா இராமேஸ்வரம் வருகை