பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | 75 ஆன்மீக வாதி. அவனே சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான். அவன் படித்தவனாக இருந்தாலும் படிக்காதவனாக இருந்தாலும். அவன் அறிந்தாலும் அறியவில்லை என்றாலும் அவனே மற்ற அனைவரையும் விடச் சிவ பெருமானுக்கு அருகில் இருக்கிறான். சுயநலம் கொண்டவன் எல்லாக் கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், சிறுத்தையைப் போல் தன. உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் திட்டிக் கொண்டிருந்தாலும் அவன் சிவபெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.” இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சொற்பொழிவாகும். உண்மையான இறையன்பர் யார் என்பதை சுவாமிகள் மிகவும் எளிமையாகவும். தெளிவாகவும் எடுத்துரைத்துள்ளார். இராமேஸ்வரம் திருக்கோயிலுடன் சம்பந்தப்பட்ட வரலாற்று ஆவணங்களுடன் சுவாமிகளது திருக்கோயில் வருகையும் சொற்பொழிவும் சிறந்த ஆவணங்கள் விளங்குகின்றன.