பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | 77 4. கி.பி. 1659 5. கி.பி. 1725 அமைத்தான். அடுத்து கி.பி.1914 ல் ர யில் பாலத்துடனான பாதை மண்டபத்திற்கும் பாம்பனுக்கும் இடையில் கடலின் மீது அமைக்கப்பட்டது. பெருகி வரும் மக்களது தேவைகளுக்கு ஏற்ப கி.பி. 1972ல் நெடுஞ் சாலைப் பாலமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மிகவும் புனிதமாகக் கருதப்படும் பசுவின் வயிற்றில் இருந்து மனிதன் பிறந்தால், அவன் எத்தகைய புனிதன் என்று சொல்லத் தேவை யில்லை. இயற்கையில் இது நடைபெறக்கூடியது அல்ல. என்றாலும் பசுவின் உருவத்தைப் பொன்னால் செய்து அதன் வயிற்றில் இருந்து பிறப்பது போன்ற வைதிக நிகழ்ச்சி ஒன்றை இராமேஸ்வரம் திருக்கோயிலில் ரகுநாத திருமலை சேதுபதி மன்னர் அவர்கள் மேற்கொண்டார். இதற்கு ஹரண்ய கர்ப்பதானம்” என்று பெயர். இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்தப் பசுவரின் உருவத்தைச் சிதைத்து அந்த பொன் தகட்டை அந்தனர் களுக்குத் தானமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஆதி சேதுவான தனுஷ் கோடியில் நடைபெற்றது 12.11659. இராமநாதபுரம் சேதுபதி மன்னரால் மண்டபம் தோணித்துறைக்கும் இராமேசுவரத்திற்கும் இடையில் சேது யாத்திரையாக வரும் பயணி -களது வசதிகளைக் கண்காணிப்பதற்காக சேதுபதியின் மருமகன் தண் டத்தேவர் என்பவர் பாம்பன் ஆளுனராக நியமனம் செய்யப்பட்டு