பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 8 | 2) கி.பி. 1826 21.9.1 fl. 1828 இராமர் செய்த கோயில் பாம்பன் கடல் வழிப்பாறையில் மோதி 101.1820-ல் நீரில் ஆழ்ந்து விட்டது. 14 படகுகளும் தண்டல், லஸ்கர். கூலிகள் என 308 ஆட்களும் முனைந்து முயற்சித்து அந்தக் கப்பலை மிதக்க விட்டனர். இதற்கான செலவு ரூ.130 அனா 13 மட்டுமே. Madurai District Records: Vol. 4673 (1825 AD) Page 256 - 259 பாம்பன் பாறையில் படகுகளை கடத்திவிடும் பணியில் இராமநாதபுரம் சடைக்கள் சேதுபதி (கி.பி. 1602-22) காலம் முதல் ஈடுபட்டிருந்ததை பாம்பன் ஆவரில் நெய்னா அம்பலம் என்பவரது உரிமையை ஆங்கிலக் கிழக் கிந்திய கம்பெனியார் பறித்து அந்தப்பணிக்கு ஒருவரை அவர்களே நியமித்தனர். அந்தப்பணி மூலம் கிடைக்கும் வருவாயையும் கம்பெனியாரே அனுபவிக்கத் தொடங்கினர். Madurai District Records Vol. 4674 (1826 AD) Page 11 மன்னார் குடாக் கடலில் முத்துக் குளிக்கும் சேதுபதி மன்னர்கள் இராமேஸ்வரம் திருப்புல்லாணி. திருப்பெருந்துறை திருக் கோயில்கள் முத்துச் சிலாப நாட்களில் தத்தமது கோவில்களுக்கு இரண்டு தோணிகளை வைத்து முத்துக் குளிக்கும் உரிமையினை வழங்கி இருந்தனர். ஆனால் ஆங்கிலேயரது இலங்கை அரசாங்கம் இராமேசுவரம் திருக்கோயில் தோணிகளுக்கு முத்துக் குளிக்க அனுமதி மறுத்துவிட்டது 20.6.1828.