பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

th இராமர் செய்த கோயில் யாத்திரையாக புறப்பட்டுச் செல்லுவதில் முடிவதைக் காண முடிகிறது. இவ்வகையில் நமது நாட்டின் பல பகுதியிலுமுள்ள மக்கள் சேதுயாத்திரை மேற்கொள்கின்றனர். காசி - இராமேஸ்வரம் என்ற வழக்கும் பின்னர் ஏற்பட்டதற்கு இதுவே காரணமாகும். பிற்காலக் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் இந்த வழக்காறு ஒம்படைக் கிளவியாகப் பயன் படுத்தப்பட்டுள்ளது. சேது..... இராமபிரான் இராவணனை வெற்றி கொண்டு பிராட்டியை மீட்க மேற்கொண்ட முயற்சியில் அமைத்த பேரணை பெருமையும். புனிதமும் பெற்ற சேது ஆகும். இதிகாசத்தின் எச்சமான அந்த இடம். எங்கு அமைந்திருந்தது?. இராம கதையின் மூலமான வால்மீகி இராமாயணத்தில் சேது அமைந்துள்ள இடம் பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. பிராட்டியைத் தேடும் பணியில் தண்டகாரணியத்தைக் கடந்து தெற்கே வந்த இராமபிராமன் மகேந்திர பர்வத உச்சியிலிருந்த கடலைக் கண்டார். பின்னர் மலைய பருவதத்தைக் கடந்து சமுத்திரக் கரையை அடைந்தார். ஆலோசனையை முடித்து சேது பந்தனத்தைத் தொடங்கினார் என்ற செய்தி மட்டும் அந்த இலக்கியத்தில் காணப்படுகிறது. அதே கதையை வழிமொழிந்து பாடும் கம்பனது காவியத்திலும். சேது பந்தனப் படலத்திலும் சேது அமைக்கப்பட்ட நிகழ்ச்சி எழுபத்தொரு பாடல்களில் இடம் பெற்று இருந்தும் கிழ்கடற்கரையில் எந்தப் பகுதியில் சேது அமைக்கப்பட்டது என்ற குறிப்பு அவைகளில் இடம் பெறவில்லை. ஆனால் பன்னெடுங்காலமாக இன்றைய இராமேஸ் வரத்திற்குத் தெற்கே வில்போல் நீண்டு வளைந்து சென்று கடலில் முடியும் தனுஷ்கோடிக் கடற்கரையில் இருந்துதான் இராமபிரானது வானரப் படை அமைத்த சேது மூலம் தொடங்கியது என மக்கள் நம்பி வருகின்றனர். 28.12.1964ல்