பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்-Xl ஆவணங்களின் சுருக்கம் இராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு அறக்கொடையாக வழங்கப்பட்டுள்ள நிலக்கொடைகள். சர்வமான்ய நிலங்களின் பட்டியல். இவை எந்த மன்னர் ஆட்சியில் எப்பொழுது வழங்கப்பட்டன என்பன போன்ற விவரங்கள் கிடைக்கப்பெற வில்லை. இணைப்புப் பட்டியலில் கண்டுள்ள ஊ ர்கள் அனைததும் இராமேஸ்வரம் திருக்கோயில் கைங்கரியத்திற்காக அறக்கொடைகளாக வழங்கப்பட்டு இருப்பதாலும் அந்தத் தர்மம் சந்திராதித்த காலம் வரை தொடர்ந்து நடக்க வேண்டுமென்று தானம் வழங்கிய மன்னர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியை அடுத்து நமது நாட்டில் மக்கள் ஆட்சி ஏற்பட்டு உழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என்ற அடிப்படையில் குடிமக்களுக்குச் சம்பந்தப்பட்ட நிலங்களுக்கான பட்டாக்கள் வழங்கப்பட்டுவிட்டன. ஆதலால் இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் மக்கள் அரசு இந்த ஊரின் நிலங்களைக் குடிமக்களுக்கு வழங்கிவிட்டதால் அந்த நிலங்களின் வருவாய்களைக் கொண்டு நடைபெற்று வந்து திருக்கோயில் பணிகள் தடைபெறக் கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு அந்தக் கிராமங்களில் இருந்து வசூலிக்கின்ற அடிப்படை நிலத் திர்வைத் தொகையை இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வழங்கி வருகின்றனர். இந்தத்