பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|*).] இராமர் செய்த கோயில் பட்டையத் தினரின்றும் சொக்கநாத புலவர் பாடிய 'தேவை லா” என்ற இலக்கியத்திலிருந்தும் இந்த அந்தணர்கள் பொத்தம் 512 பேர் என்பதும் அவர்கள் கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் இராமேஸ்வரத்தில் இருந்து வருவதும் தெரிய வருகிறது. இவர் களைப் பண் டாக்க ள என்ற சொல்லால் மக்கள் குறிப்பிட்டு வழங்கி வருகின்றனர். இந்த அந்தனர் மரபில் தோன்றியவர் தான் பண்டிதர் கயாதரர் என்பவர். கி.பி. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவரைப் பற்றிய செய்திகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை யென்றாலும் அன்றைய காலகட்டத்தில் அவர் தமிழுக்குச் செய்த அரும்பணியை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ் மொழியின் சொற்களுக்குப் பொருள் விளக்கம் தரும் அகராதிகளும். பேரகராதிகளும் தமிழில் தோன்றாத நிலையில் பண்டிதர் கயாதரர். இத்தகைய அகராதி ஒன்றினை. வரைந்து உதவியுள்ளார். அந்த நூலின் பெயர் கயாதரர் நிகண்டு என்பது ஆகும். இந்த நிகண்டு தோன்றுவதற்கு முன்னர் திவாகரம் நிகண்டு. பிங்கலந்தை நிகண்டு, சூடாமணி நிகண்டு என்ற மூன்று நிகண்டுகள் (செய்யுளில் அமைந்த அகராதி) மட்டும் பண்டிதர்களது பயன்பாட்டில் இருந்து வந்தன. அன்றைய நிலையில் வளர்ந்து வந்துள்ள தமிழ் மொழியின் சொல்லாட்சிக்கு கூடுதலான இலக்கம் தருவதாக இந்த நூல் அமைந்துள்ளது. மேலும் இந்த ஆசிரியர் இராமேஸ்வரத்தில் குடி கொண்டுள்ள இராமநாத சுவாமியை போற்றி இலக்கியம் ஒன்றும் படைத்துள்ளார். இராமநாதர் மீதான அந்தக் கோவை நூல் இன்று கிடைப்பதற்கு அரிதாக உள்ளது. 2) சுவாமி சதாசிவ பிரம்மேந்திரர் இவர் இராமேஸ்வரம் தலத்தில் சோம அவதானி. பார்வதி அம்மாள் என்ற தம்பதியருக்கு கி.பி. 1850 இல் மகனாகப் பிறந்தவர். மதுரை மாநகரைத் தலைநகராகக் கொண்டு விஜய