பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | 95 நகர நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த பொழுது வடக்கே ஆந்திர நாட்டிலிருந்து இந்தத் தம்பதியினர் மதுரையில் குடியேறினர். பல வருடங்களாக அவர்களுக்குப் பிள்ளைப்பேறு கிடைக்காத காரணத்தினால் இந்த தம்பதியினர் இராமேஸ்வரத்தில் குடியேறி வாழ்ந்து வந்ததுடன் நாள்தோறும் இராமநாத சுவாமியை நினைந்தவர்களாக பல அறப்பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்களது இறை பக்தியின் பயனாக ஒரு ஆண்குழந்தை அவர்களுக்குப் பிறந்தது. அந்த குழந்தைக்குப் பெற்றோர்கள் இட்ட பெயர் சிவராமகிருஷ்ணன் என்பதாகும். பிள்ளை பாலகனாகி இளைஞனாக வளர்ந்த பொழுது அவன் தெலுங்கு. சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் அவைகளில் உள்ள தர்ம சாஸ்திரங்களையும் கற்றுத் தெளிந்தான். அன்றைய கால வழக்கப்படி அவனுக்கு 10வயது நிரம்பிய சிறுமி ஒருத்தியை பால்ய மணம் செய்து வைத்தனர். சில காலமாக தமது இல்லற வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்த அந்த இளைஞன் இல்லறம் என்பது ஆசைகளின் சங்கமம் என்பதையும் அதில் இணைந்து விட்டால் இறைவனைத் தொழுவதற்கும் பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கும் இடர்ப்பாடாக இருக்கும் என்ற முடிவிற்கு வந்தார். ஒரு நாள் தமது பெற்றோர்களுக்குக் கூடத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி கால்நடையாகவே கால்போன போக்கில் நடந்து சென்றார். குடந்தை நகரை அடைந்தவுடன் அங்குள்ள காமகோடி பீடாதிபதியை வணங்கித் தம்மை சிடனாக ஏற்று ஆசிர்வாதம் செய்யுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். ஆச்சாரியரும் அந்த இளைஞனது ஆன்மிக நம்பிக்கையை வளர்க்கும் வண்ணம் அவனைத் தமது சிடனாக ஏற்றுக் கொண்டார். அங்கு வேறு பல நூல்களையும் தர்ம சாஸ்திரங் களையும் கற்றுப் பெரும் பண்டிதரர்னார் அந்த மடத்திற்கு வருகின்ற ஆன்மிகத்தில் சிறந்த பண்டிதர்களுடன் வாதிட்டுத் தமது புலமையை நிரூபித்து வந்தார்.