பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| Qū &grഥrr செய்த கோயில் அதனை அறிந்த அவனது ஆச்சாரியார் பேசு தலை நிறுத்தி மெளனத்தில் இறைவனைக் காணுமாறு உபதேசித்தார். அன்று முதல் ஆழ்கடல் போல அமைதியுற்ற இளைஞன் மோனத்திலும் நிட்டையிலும் இறை இன்பத்தை உணர்ந்தான். அடுத்த நாள் அந்த மடத்திலிருந்தும் வெளியேறி திகம்பர கோலத்துடன் (நிர்வான) ஊர்ஊராகச் சுற்றி அலைந்து பாமரர்களது ஏச்சிற்கும் பக்திமான்களது போற்றுதலுக்கும் உரிய சதாசிவர் பிரம்மேந்திரா என அழைக்கப்பட்டார். அவரது ஆன்மிக பலத்தினால் அடையப் பெற்ற அவரது சித்திகளைக் கண்டுனர்ந்த புதுக்கோட்டை தஞ்சை மன்னர்கள் அவருக்கு தக்க மரியாதைகளைச் செய்து மகிழ்ந்தனர். இறுதியில் சேலம் மாவட்டத்தை ஒட்டிய கொடுமுடி என்ற ஊரை அடுத்த நேரூர் என்ற இடத்தில் ஜீவசமாதி அடைந்தார். அவர் இயற்றிய சில தெலுங்குப் பாடல்கள் மட்டும் இன்று நமக்குக் கிடைக்கிறது. 3) பாம்பன் சுவாமிகள் கி.பி. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முருகன் அருள் பெற்ற மிகச்சிறந்த இறை அடியார் அருணகிரி சுவாமிகள் இயற்றிய 6000க்கு மேற்பட்ட இன்னிசைப் பாடல்கள் இன்றும் திருப்புகழ் என ஒலித்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். இவரைத் தமது ஆன்மிக குருவாக ஏற்று அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தியும் பல தமிழ் இலக்கியங்களைப் படைத்தவருமானவர் பாம்பன் சுவாமிகள் ஆவார். இவரது சமாதி சென்னை நகரில் திருவான்மியூரில் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவர் பிறந்து வளர்ந்தது இராமேஸ்வரம் என்பதை பலரும் அறியார். பாம்பன் சுவாமிகள் என அழைக்கப்படுகின்ற இவர் கி.பி.1849-இல் இராமேஸ்வரம் தலத்தில் பிறந்தார். இவரது இராம - 14