பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | 97 பெற்றோர்கள் அப்பொழுது இவருக்கு இட்ட பெயர் அப்பாவு என்பது ஆகும். தமிழிலும் வடமொழியிலும் இம்மைக்கும் மறுமைக்கும் உதவும் மிகச்சிறந்த கல்வியை இராமேஸ்வரத்தில் உள்ள பண்டிதர் ஒருவரிடம் பயின்று தேர்ச்சி பெற்றார். இவரது தந்தை இராமேஸ்வரத்தை அடுத்த பாம்பனைச் சேர்ந்தவர் ஆதலால் இவருக்கு பாம்பன் சுவாமிகள் என்ற பெயர் பிற்காலத்தில் ஏற்பட்டது. இளமை வயது முதல் முருகப் பெருமான் மீது இடையறாத பக்திப் பெருக்கினால் பல பாடல்களைப் புனைந்து பாடிக் கொண்டிருந்தார். பிரப்பன்வலசையில் உள்ள வீட்டிற்கு வந்து தங்கிய இவர் அந்த உறவின் ஒருவரது கிராமத்தின் வட புறத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் ஒரு பெரிய குழியினை வெட்டி அதில் அமர்ந்து தவமிருந்தார். அன்ன ஆகாரமின்றி ஆறுமுகனது தரிசனத்தைக் கண்டபிறகுதான் தமது தவத்தை முடிப்பதாகக் கூறிவிட்டு தவத்தினை மேற்கொண்டார். நாற்பதாவது நாளில் குமரக் கடவுளது அழகுக் கோலத்தை கண்டு பரவசமிக்கவராக அந்த இடத்திலிருந்து எழுந்து வந்தார். அதுமுதல் எங்குமே நிலைபெறாமல் தொடர்ந்து வடக்கு நோக்கிப் பயணம் மேற்கொண்டவராகச் சென்னை மாநகரின் தென் பகுதியில் உள்ள திருவான் மியூரை அடைந்த பிறகுதான் அங்கு அவர் நிலையாகத் தங்கினார். இரவும் பகலும் முருகனது புகழ்பாடும் பணியில் அவரது நாட்கள் கழிந்தன. மிகப்பெரிய அழியாக் கூட்டமொன்று அவரை எப்பொழுதும் சூழ்ந்தவாறு பணிவிடைகளைச் செய்து வந்தது. இறுதியாக கி.பி.1929-இல் அந்த இடத்திலேயே ஜீவ சமாதி அடைந்தார். அந்த இடத்தை ஒரு சிறந்த புனிதத் தலமாக அவரது அடியார்கள் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். அவர் இயற்றிய இலக்கியங்களை பதிப்பித்தும் அவை பற்றிய