பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 இராமர் செய்த கோயில் வித்தகர்கள் ஏற்று நடத்தி வந்தனர். அதனால் இவர்கள் பஞ்ச தேசத்து ஆரியர் என வழங்கப்பட்டனர். 4) இரண்ய கர்ப்ப தானம் இந்து சமய சாஸ்திரங்களில் கோதானம், பூதானம். கன்னிகாதானம் என்பன போன்று முப்பத்திரண்டு வகையான தானங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அவைகளில் சேராதது இந்த வகையான தானமாகும். அதாவது பூவுலகில் கங்கை நீருக்கு அடுத்தபடியாக துய்மையானதாக, பவித்திரமானதாக கருதப்படுவது பகவாகும். இந்தப் பசுவின் வயிற்றிலிருந்து ஒரு மனிதன் பிறப்பு எய்தினால் அவனும் நிச்சயமாக மிகவும் புனிதமானவனாக கருதப்படுவான் அல்லவா? ஆதலால் ஒரு பசுவின் உருவத்தைப் பொன் தகடுகளால் செய்து அதன் வயிற்றிலிருந்து மனிதன் பிறப்பது போன்ற ஒரு சடங்கினைச் செய்த பிறகு அந்தப் பசுவின் உருவத்தை சிதைத்து அதில் பயன்பட்டிருந்த பொன் தகடுகள் அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டன. இரணிய - பொன். கர்ப்ப = வயிறு. தானம் = தர்மம் ஆதலால் இந்த வகையான சடங்கு - தானம் இரணிய கர்ப்பதானம் எனப்பட்டது. இத்தகைய சடங்கினை கி.பி. 1655ல் இராமநாதபுரம் மன்னர் திருமலை ரெகுநாத சேதுபதியும் கி.பி. 1659இல் தஞ்சை மன்னர் ரெகுநாத நாயக்கரும் இராமேஸ்வரம் திருக்கோயிலில் நிறைவேற்றினர் என்ற செய்தியை வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன. 5) சந்தி இராமேஸ்வரம் திருக்கோயிலில் நாள்தோறும் ஆகம முறைப்படி ஆறுகால பூஜைகள் நடைபெற்றுவருகின்றன. ஒரு