பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ኲና இராமர் செய்த கோயில் m - * சேதுக்கரைக் கடலில் சேது மூலே புல்லாரண்ய கேஷ்ைத்ரே என்ற சங்கல்பத்துடன் மக்கள் கடலில் புனித நீராடி எழுந்து வருகின்றன 厅 மேலும், முந்நீர்க் கடல் சூழ்ந்த கன்னியாகுமரிதான் ஆதிசேது எனக் கன்னியாகுமரித் தலபுராணம் கூறுகிறது. இராமாயனக் கதையில் சேது அணை எங்குக் கட்டப்பட்டது என்ற தெளிவான செய்தி விடுபட்டுப் போனதால் இந்தக் குழப்பங்கள் என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம் என்றாலும். 'இராமன் இருக்கும் இடம் தான் அயோத்தி” என்பது போல் இராமன் பற்றிய செய்திகள் மக்களது மனத்தில் கொள்ளும் மனநிலையைப் பொறுத்தே இந்த ஐதீகங்கள் அமைகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த சேதுபந்தன நிகழ்ச்சி காரணமாகக் கிழக்குக் கடற்கரையை ஒட்டிய மறவர் சிமை கோடிநாடு என்றும் சேது நாடு என்றும் வழக்குப் பெற்றது. இந்த நாட்டில் செங்கோல் செலுத்திய மன்னர் பரம்பரையினர் சேதுபதிகள் என்று அழைக்கப்பட்டனர். சேனை அதிபதி, சேனாதிபதி என்றாற்போல சேதுவிற்கு அதிபதி சேதுபதியாகும். இராமநாதபுரம் மன்னர் பற்றிய ஆவனங்களில் பதினைந்தாவது நூற்றாண்டு முதல் சேதுபதி என்ற சொல்லாட்சி ஏற்பட்டு இருப்பது தெரிய வருகிறது: இன்னொரு செய்தி இராவன வதத்தை மேற்கொண்ட பிறகு பிராட்டியுடன் இராமபிரான் வான்வழியே அயோத்தி திரும்பும் பொழுது இராவணனது நிழல் அவர்களைத் தொடர்ந்து வந்ததாகவும். அதற்குக் காரணம் என்ன என்பதை 1. இராகவ ஐயங்கார் மகாவித்வான் - மு. ஆராய்ச்சித் தொகுதி 2. Ferguson - History of India and the eastern Architechture - 1876